LATEST

Thursday, February 20, 2020

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 6

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 6

12. ஒரளவிற்கேயான கூட்டாட்சி அமைப்பு

•    இந்தியாவின் அரசியல் சட்டம், அரசாங்கத்தின் ஒரு கூட்டாட்சி அமைப்பை நிறுவியுள்ளது. ஒரு கூட்டமைப்பினுடைய அனைத்து, வழக்கமான சிறப்பம்சங்களை அது கொண்டிருக்கிறது: அதாவது இரண்டு அரசாங்கங்கள், அதிகாரங்களின் பிரிவினைகள், எழுத்துப10ர்வமான ஓர் அரசியல் சட்டம், அரசியல் சட்டத்தின் உச்ச மேல்நிலை, அரசியல் சடடத்தின் உறுதித்தன்மை, சுதந்திரமான நீதித்துறை மற்றும் இரண்டு சட்டமியற்றும் அவைகளின் செயல்தன்மை – ஆகியவை.
•    எப்படியிருப்பினும், இந்திய அரசியல் சட்டம், பெரும் எண்ணிக்கையில் கூட்டாட்சித் தன்மையில்லாத அல்லது ஒற்றைத் தன்மையில் அமைந்துள்ள அம்சங்களையும் கொண்டுள்ளது. அதாவது, ஒரு வலிமைமிக்க மைய அரசு, ஒற்றை அரசியல் சட்டம், அரசியல் சட்டத்தின் நெகிழ்வுத் தன்மை, ஒருங்கிணைந்த நீதித்துறை, மாநில ஆளுநர் மத்திய அரசினால் நியமனம் செய்யப்படுவது, அகில இந்தியப்பபணிகள், அவசரநிலை (நெருக்கடிநிலை)ப் பிரகடன விதிகள், இன்ன பிற அம்சங்கள் ஆகியவை.
•    மேலதிகமாக, அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் ‘கூட்டமைப்பு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
•    ஆகவே, இந்திய அரசியல் சட்டம்,‘வடிவத்தில் கூட்டாட்சித் தன்மையுடன், ஆனால் உள்ளடக்கத்தில் ஒற்றைத் தன்மையுடன் ‘வௌ;வேறு வகையில் விவரிக்கப்படுகிறது.

13. மதச்சார்பற்ற அரசு

•    இந்தியாவின் அரசியல் சட்டம், மதச்சார்பற்ற ஓர் அரசுக்காக நிற்கிறது. ஆகவே, அது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மதமாக உயர்த்திப் பிடிக்கவில்லை.
•    மதச்சார்பற்ற தன்மை என்பதற்கான மேற்கத்திய கருதுகோள் அதன் கூடுதலான அர்த்தத்தில், மதத்திற்கும் (தேவாலயம்) மற்றும் அரசுக் (அரசியல் நிறுவனம்)-கும் இடையே முற்று முழுதான பிரிவினையை வலியுறுத்துவதாக அமைகிறது. மதச்சார்பற்ற தன்மையின் இந்த எதிர் காரணம், இங்கு சமூகமே பல மதங்களின் கலவையாய் அமைந்துள்ளது, ஆகவே, இந்திய அரசியல் சட்டம், மதச்சார்பற்ற தன்மையின் நேர்மறைக் கருதுகோளை, தன்னுள் ஒரு பகுதியாக உள்ளடக்கியுள்ளது. அதாவது, எல்லா மதங்களுக்கும் சமமான மரியாதையை வழங்குவது அல்லது எல்லா மதங்களையும் சமதையான வகையில் பாதுகாப்பது.

No comments:

Post a Comment