இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 7
14. வயது வந்தோர் அனைவருக்கம் வாக்குரிமை
• இந்திய அரசியல் சட்டம், மக்களவைக்கும் மாநிலங்களின் மன்றப் பேரவைகளுக்கும் நடத்தப்படும் தேர்தல்களின் அடிப்படை அம்சமாக வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதைக் கொண்டிருக்கிறது. 18 வயதிற்குக் குறையாத வயதுடைய ஒவ்வொரு குடிமகனும் / குடிமகளும் சாதி, இனம், மதம், பாலினம், கல்வி, செல்வம் இன்ன பிற எந்த ஓர் அம்சத்தின் அடிப்படையிலும் பாரபட்சத்திற்கு உட்படுத்தப்படாமல் தனது வாக்கைப் பயன்படுத்துவதற்கு உரிமை படைத்தவராயிருக்கிறார்.
• 1988-ம் ஆண்டு 61-வது அரசியல் சட்டத்திருத்தச் சட்டம் மூலம் 21 வயதாக இருந்த வாக்களிக்கும் வயது, 18 வயதாக 1989-ல் குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
• வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பது ஜனநாயகத்தைப் பரந்த அடிப்படை உடையதாக ஆக்குகிறது: பொதுவாக சாதாரண மக்களின் சுயமரியாதையையும் கௌரவத்தையும் உயர்த்துவ அமைகிறது: சமத்துவ கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது: சிறுபான்மை மக்களுக்குத் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமையை அளிக்கிறது மற்றும் பலவீனமான பிரிவு மக்களுக்குப் புதிய நம்பிக்கைகளையும், பார்வைக் கண்ணோட்டங்களையும் திறந்து வைக்கிறது.

15. சுதந்திரமான அமைப்புகள்
• இந்திய அரசியல் சட்டம், மத்திய மற்றும் மாநில) அரசாங்கங்களின் சட்டமியற்றும், நிர்வாகப்ப10ர்வ மற்றும் நீதியியல் அமைப்புகளை மட்டும் வழங்கவில்லை. மாறாக, அவற்றுடன் கூடுதலாக சில சுதந்திரமான அமைப்புகளையும் கூட நிறுவகை செய்துள்ளது.
அத்தகைய அமைப்புகள் பின்வருவன:
• தேர்தல் ஆணையம் – இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவி, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றப் பேரவைகள் ஆகியவற்றுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்தி நடத்தி வைக்கும் அமைப்பு.
• பொதுத் தலைமைக்கணக்கு மற்றும் கட்டுப்பாட்டாளர் – மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளைத் தணிக்கை கருவ10லத்திற்குக் காப்பாளராக அவர் செயல்படுகிறார். மேலும் அரசாங்கச் செலவினங்களுடைய சட்டப10ர்வமான தன்மை மற்றும் அவற்றின் தார்மிக அறநெறிகளுக்குட்பட்ட தன்மையின் மீது (தணிக்கையடிப்படையில்) கருத்துரைகளை முன் வைத்துச் செயல்படுபவர்.
• மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் – அகில இந்திய சேவைப் பணிகள் மற்றும் உயர்நிலை மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்காகப் பல்வேறு தேர்வுகளை நடத்தித் தருவதும், ஒழுங்குமுறை தொடர்பான பிரச்சனைகளில் குடியரசுத் தலைவருக்கும் அறிவுரை வழங்குவதும் இதன் பணிகள்.
• மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் – ஒவ்வொரு மாநிலமும், மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்காகப் பல்வேறு தேர்வுகளை நடத்தித் தருவதற்கும், ஒழுங்குமுறை தொடர்பான பிரச்சனைகளில் ஆளுநருக்கு அறிவுரை வழங்குவதற்காகவும் இத்தேர்வாணையத்தை அமைத்துக் கொண்டுள்ளது.
• அரசியல் சட்டம், இத்தகைய அமைப்புகளின் சுதந்திரத் தன்மையைப் பல்வேறு விதிகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. பதவிக்காலத்தின் பாதுகாப்பு, திட்டவட்டமாக நிர்ணயிக்கப்பட்ட பணி நிலைமைகள், இவ்வமைப்புகளுக்கான செலவினங்கள் அனைத்தும் இந்தியாவின் தொகுப்பு நிதியில் சேர்க்கப்பட்டு கணக்கிடப்படுகின்றன மற்றும் இத்தகைய விதிகளே அவை.

16. மூன்று அடுக்கு அரசாங்கம்
• இந்திய அரசியல் சட்டம், அதன் மூல வடிவத்திலேயே, வேறெந்த ஒரு கூட்டாட்சி அரசியல் சட்டத்தையும் போல, இரட்டை அரசு நிர்வாக அமைப்புகளை வழங்கியிருக்கிறது. மத்திய மற்றம் மாநில அரசுகளின் அமைப்பு முறை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான விதிகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது.
• பிற்பாடு, 73-வது மற்றும் 74-வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் (1992), உலகில் வேறு எந்த ஓர் அரசியல் சட்டத்திலும் காணப்படாத வகையில் அமைந்த மூன்றடுக்கு அரசாங்கம் (உள்ளாட்சி அரசாங்கம்) என்ற அம்சத்தைப் புதிதாகச் சேர்த்துள்ளது.

No comments:
Post a Comment