LATEST

Thursday, February 20, 2020

ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்

ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்

ஒன்றியமும் அதன் ஆட்சிப்பரப்பும்

பிரிவு 1    ->    ஓன்றியத்தின் பெயரும் அதன் பரப்பும்
பிரிவு 2    ->    ஒரு புதிய மாநிலத்தைச் சேர்த்தல் அல்லது நிறுவுதல்
பிரிவு 2A    ->    சிக்கிம் இந்தியாவின் இணைப்பு மாநிலம் – நீக்கப்பட்டது
பிரிவு 3    ->    ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குதல், இருக்கும் மாநிலங்களின் பரப்புகள், எல்லைகள் மற்றும் பெயர்களை மாற்றுதல்
பிரிவு 4    ->    இருக்கும் மாநிலத்தின் பரப்பு முதலியவைகள் மாற்றப்பட்டாலோ, அரசியலமைப்பில் அவை தொடர்பான திருத்தங்களை பாராளுமன்றமானது எளிய பெரும்பான்மையின் (Simple Majority Parliament) அடிப்படையில் சட்டமாக இயற்றி நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த திருத்தம் சரத்து 368-ன் கீழான ஒரு அரசியலமைப்பு திருத்தமாக கருதப்படாது.

மேற்கண்டவைகளை எவ்வாறு செய்வது என்பதற்குண்டான நடைமுறைகளும் (Procedures) சரத்து 3-ன் கீழாகவே கொடுக்கப்பட்டுள்ளன.
•    சரத்து 2 மற்றும் 3 சட்டத்திற்குண்டான மசோதா (Bill) இந்திய குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரில்தான் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.
•    எனினும், குடியரசுத் தலைவர் மேற்கண்டவாறு பரிந்துரை செய்வதற்கு முன்னர், மேற்படி மசோதாவால் பாதிப்பிற்குள்ளாகும் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அம்மாசோதா குறித்து அதன் கருத்துகளை தெரிவிப்பதற்காக அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment