மக்களாட்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. இந்திய குடிமக்கள் தேர்தலில் போட்டியிட 25 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.2. இந்தியாவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை நேரடித் தேர்தல் முறை.
3. மத்திய அரசிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றழைக்கப்படுவர்.
4. மாநில அரசிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்றழைக்கப்படுவர்.
5. கிராமங்களையும் நகரங்களையும் நிர்வகிக்கும் அமைப்புகள் உள்ளாட்சி அமைப்புகள்.
6. இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிப்பவர் குடியரசுத் தலைவர்.
7. இந்திய தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
8. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தேர்தல் ஆணையம்.
9. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வது இந்தியா.
10. இந்திய அரசியல் சாசனம் மக்களாட்சி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.
No comments:
Post a Comment