LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 5

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 5

திருநெல்வேலி மாவட்டம்

•    தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட 5 நிலங்களும் அடங்கிய மாவட்டம்
•    தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என திருநெல்வேலி (பாளையம்கோட்டை) அழைக்கப்படுகிறது
•    இங்கு சுண்ணாம்பு கற்கள் அதிகம் கிடைக்கின்றது. மேலும் இங்குள்ள கடற்கரை மணலில் கார்னைட் உள்ளது
•    புலிகள் சரணாலயம் உள்ள களாக்காடு மற்றும் முண்டந்துறை இம் மாவட்டம் ஆகும்.
•    தூமிரபரணி, பச்சையாறு, கோரயார், சித்தாறு, அழுதகண்ணியாறு, ஜம்புநதி, இராமநதி, கடநதி, அனுமன் நதி, கருப்பநதி, நம்பியாறு, கோதையாறு, மணிமுத்தாறு ஆகியவை பாய்கின்றன
•    குற்றால நீர் வீழ்ச்சி (Spa of the South)  இம் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
•    மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம் 1990ல் துவக்கப்பட்டது
•    மாஞ்சோலை, குற்றாலம் இம் மாவட்டத்தில் உள்ளது.
•    அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி மையம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான பயிர் நெல் ஆகும். இரண்டாவது பருத்தி ஆகும்.
•    கூடங்குளம் அணுமின் நிலையம் திருநெல்வேலியில் இருந்து 110 கி. மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 44 கி. மீ. தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து 25 கி. மீ. தொலைவிலும் உள்ளது. இம் மாவட்டத்தில் உள்ள மக்கிய அணைகள் 1. பாபநாசம் அணை 2. Karayar Dam 3. Servalar Dam 4. மணிமுத்தாறு அணை

மதுரை மாவட்டம்

•    மதுரை மாவட்டம் மேலக்கோட்டை என்ற கிராமத்தில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் முதன் முதலில் துவக்கப்பட்டது. இத் திட்டம் 17.8.1998ல் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம்

•    நெய்வேலி பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) சுரங்கம், இம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
•    செம்மண்டலம் என்னும் இடத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது
•    விருதாசலத்தில் கடுகு ஆராய்ச்சி நிலையம் உள்ளது
•    உலகத்தின் மிக பழமையான சர்க்கரை ஆலைகளில் ஒன்றான நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை இம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment