LATEST

Friday, February 21, 2020

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Art 36-51) பகுதி 3

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Art 36-51)

அரசிற்கு வழிகாட்டும் கொள்கைகள்

•    பகுதி IV- ல் ஷரத்து 36 முதல் 51 வரை அமைந்துள்ளது.
•    அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
•    Dr.B.R. அம்பேத்கார் இதனை இந்திய அரசியலமைப்பின் “புதுவகையான முக்கியத்துவம்” என குறிப்பிடுகிறார்.
•    நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பின் தத்துவார்த்தமான பகுதிகள் மற்றும் ஆன்மா நிறைந்த பகுதிகளாகும்.
•    நல அரசு கோட்பாட்டை இப்பகுதி வலியுறுத்துகிறது.
•    இப்பகுதி நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மக்காளட்சி கோட்பாட்டை நிலைநிறுத்துகிறது.
•    இக்கோட்டுகளை மீறினால் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற இயலாது.
•    நெறிமுறைக் கோட்பாடு மற்றும் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என கிரான்வில்லி அஸ்டின் (Granville Austin) குறிப்பிடுகிறார்.

நெறிமுறைக் கோட்பாடுகளின் முக்கியத்துவம்

•    அரசாங்கமானது மக்கள் நலனிற்காக கொள்கைகளை வகுக்கும் போதும் சட்டங்களைச் செயல்படுத்தும் போதும் நெறிமுறைக் கோட்பாட்டின் லட்சியங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் செயல்பட வேண்டும். இது அரசியலமைப்பின் அறிவுறுத்தலாகும் அல்லது நாட்டின் சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அங்கங்களுக்கு பரிந்துரைப்பதாகும்.
•    நவீன மக்கள் நல அரசின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவைகள் நாட்டில் பொருளாதார சமூக மக்களாட்சியை நிலை நிறுத்துவதாக அமைய வேண்டும்.
•    இக்கோட்பாடுகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற இயலாது. மேலும் நீதிமன்றம் வாயிலாக சட்டப்படி செயல்பட வலியுறுத்த இயலாது. எனினும் நாட்டின் அரசாங்க செயல்பாட்டில் இந்த நெறிமுறைகள் அடிப்படையானதாகும். மேலும் அரசாங்கம் உருவாக்கும் சட்டங்களில் இந்த நெறிமுறைக் கோட்பாட்டினை உட்புகுத்துவது அதன் கடமையாகும்.
•    நெறிமுறைக் கோட்பாடானது நீதிமன்றத் தீர்வு பெற முடியாவிட்டாலும் அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகும் தன்மை குறித்து சோதிப்பதற்கும் மற்றும் தீர்மானிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

No comments:

Post a Comment