நெறிமுறைக் கோட்டின் வகைப்பாடு
நமது அரசியலமைப்பு நெறி முறைக் கோட்பாட்டை எவ்விதத்திலும் வகைப்படுத்தவில்லை இருப்பினும் அதன் உள்ளடக்கம் மற்றும் கோட்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அவைகளாவன. சோசலிசம், காந்தீயம் மற்றும் சுதந்திர அறிவுசார்ந்த கோட்பாடுகளாகும்.
சோசலிசக் கோட்பாடு
• உண்மையான நல அரசு ஒன்றை உருவாக்கும் நோக்கத்திலேயே நெறிமுறைக்கோட்பாடுகள் அமைந்துள்ளன. அத்துடன் பொருளாதாரச் சுரண்லுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும், சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டி நியாயமான சமூக அமைப்பு சுமத்துகிறது. மக்கள் அனைவருக்கும் சமூக பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி நல அரசை உருவாக்க முயல வேண்டும் - ஷரத்து 38.
• ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்தல்
• ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதன் மூலம் சமமான நீதி முறையை ஏற்படுத்துவது - சரத்து 39A
• அரசின் பொருளாதாரத் திறனுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டு வேலை செய்யும் உரிமையையும், கல்வி பெறும் உரிமையையும் வழங்கவும், வேலையில்லாத நிலையில் முதுமையில் நோயுற்றபோதும் – இயலாத சூழ்நிலைகளில் அரசின் உதவியை வழங்கவும் முயலவேண்டும், என சரத்து 41 கூறுகிறது.
• மனிதாபிமான வேலைச்சூழல் அமைய, பேறுகாலச் சலுகை கிடைக்க சரத்து 42 வகை செய்கிறது.
• ஊட்டசத்து அளவை உயர்த்தி, வாழ்க்கைத் தரத்தையும் பொது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது அரசின் கடமை என சரத்து 47 கூறுகிறது.

காந்தீய கோட்பாடுகள்
• காந்தீய சிந்தனைகளின் அடிப்படையில் இக்கோட்பாடு அமைந்துள்ளது.
• கிராமப் பஞ்சாயத்துக்களை அமைத்தல் – சரத்து 40
• கிராமப் புறங்களில் தனிநபர் அல்லது கூட்டுறவு முறையில் குடிசைத் தொழில்களை மேம்படுத்துதல் – ஷரத்து 43
• உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யக்கூடிய மதுவகை மற்றும் போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல் – சரத்து 47
• பசுவதையை தடுத்தல். கன்றுகள் மற்றும் பால் தரும் பசுக்கள், தீவனம் இன்றி வாடும் கால்நடைகளின் நலன்களை பேணுதல் – சரத்து 48

சுதந்திரமான அறிவுசார்ந்த கோட்பாடு
• சுதந்திரப் போராட்ட கால சிந்தனைகளை உள்ளடக்கிய கோட்பாடாகும்.
• நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வருதல் – சரத்து 44
• ஆறு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியளிப்பது – சரத்து 45
• நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல் – சரத்து 50

No comments:
Post a Comment