LATEST

Friday, February 21, 2020

குடியரசுத் தலைவர் தகுதிகள்

குடியரசுத் தலைவர் தகுதிகள்

•    இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
•    35 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.
•    மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.
•    மத்திய, மாநில அரசுகளிலோ, அல்லது உள்ளுர் அமைப்புகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ ஆதாயம் பெறும் பதவிகளை வகிக்கக்கூடாது.
•    பதவிப் பிரமான உறுதி மொழி (சரத்து – 60)
•    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவர் பதவியில் இல்லாதபோது வயதில் மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் மற்றும் உறுதி மொழியை செய்துவைப்பார்.
•    குடியரசுத்தலைவர் அலுவலக பதவிகாலம்
•    குடியரசுத் தலைவர் பதவிக்காலம் அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை இருக்கும்.
•    குடியரசுத் தலைவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் பதவிவிலகலாம்.
•    தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவரிடம் வழங்க வேண்டும்.
•    அவர் பதவிக்காலம் முடியும் முன்பே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இரண்டாம் முறை போட்டியிட அனுமதியுண்டு, எத்தனைமுறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்.
•    குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் (சரத்து 61)
•    அரசியலமைப்பை மீறி செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யலாம்.
•    பதவி நீக்க செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் துவங்கலாம். அந்த அவையில் ¼பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து அந்தந்த அவை தலைவர்களிடம் வழங்கவேண்டும். மேலும் குடியரசுத்தலைவருக்கு 14 நாளுக்கு முன்பாக பதவி நீக்கம் தொடர்பான அறிக்கை அளிக்க அனுப்ப வேண்டும்.
•    பதவி நீக்க மசோதாவிற்கு மொத்த உறுப்பினர்களில் 2ஃ3 பங்கு ஆதரவாக வாக்களித்தால் அந்த அவையில் இருந்து மற்றொரு அவைக்கு மசோதா இடம் பெறும் அங்கும் சிறப்பு பெரும்பான்மையில் வெற்றிபெற்றால் குடியரசுத் தலைவர் பதவி விலகவேண்டும்.
•    குடியரசுத் தலைவரை பதவி நீக்குவதில் பாராளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள மொத்த உறுப்பினர்கள் (நியமன உறுப்பினர்களும் அடங்குவர்) பங்கு கொள்வர். இரு அவைகளின் நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறவில்லை என்றாலும் அவரை பதவி நீக்குவதில் இடம்பெறுகின்றனர்.
•    இது வரை எந்த ஒரு குடியரசுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட வில்லை.

No comments:

Post a Comment