LATEST

Friday, February 21, 2020

குடியரசுத்தலைவர் அலுவலகம் வெற்றிடமாவது

குடியரசுத்தலைவர் அலுவலகம் வெற்றிடமாவது

•    பதவிக்காலம் முடிவுறுதல்.
•    பதவி விலகுதல்.
•    பதவி நீக்கம் மூலம்.
•    அவரின் இறப்பு

இதர இனங்கள் உதாரணமாக தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தல்; குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக உருவாகும் அனைத்து சர்ச்சைகளுக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது.
•    குடியரசுத்தலைவர் அலுவலகம் குடியரசுத் தலைவரின் பதவி விலகல், பதவி நீக்கம், இறப்பு அல்லது இதர காரணங்களால் வெற்றிடம் ஏற்பட்டால் ஏற்பட்ட நாளிலிருந்து 6-மாத காலத்திற்குள் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குடியரசுத் துணைத்தலைவர் குடியரசுத் தலைவராக பதவி வகிப்பார்.
•    பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஏதேனும் இயலாத காரணத்தால் தற்சமயம் விடுப்பில் இருந்து மீண்டும் சில காலம் கழித்து பதவி ஏற்கும் வரை குடியரசுத்துணைத் தலைவர் அப்பதவியை வகிப்பார்.
•    ஒருவேளை குடியரசுத் துணைத்தலைவர் பதவியும் காலியாக இருந்தால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவராக பதவி வகிப்பார். (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியும் காலியாக இருந்தால் வயதில் மூத்த உச்சநீதி மன்ற நீதிபதி குடியரசுத்தலைவராக பதவி ஏற்பார்)

No comments:

Post a Comment