LATEST

Friday, February 21, 2020

மத்திய நிர்வாகத் துறை

மத்திய நிர்வாகத் துறை

குடியரசுத் தலைவர்

சரத்து 52-முதல் 78 வரை நிர்வாகத்தை பற்றி விவரிக்கிறது.
•    மத்திய நிர்வாக அமைப்பானது குடியரசுத்தலைவர், குடியரசுத்துணைத்தலைவர், பிரதமமந்திரி, அமைச்சரவை குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோர்களை உள்ளடக்கியுள்ளது.
•    குடியரசுத்தலைவர் இந்திய அரசின் தலைவர் ஆவார். அவர் நாட்டின் முதல் குடிமகனாவார். மேலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னமாக திகழ்கிறார்.
•    குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தல் (சரத்து 55)
•    குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை ஆனால் தேர்வாளர் குழுவின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

தேர்வாளர் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள்:

•    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
•    அனைத்து மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
•    சட்டமன்றங்கள் உள்ள டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
•    அரசியலமைப்பின்படி குடியரசுத்தலைவர் தேர்தலில் வௌ;வேறு மாநிலங்களுக்கும் அதனுடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் நாடு முழுமைக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.
•    இதனை பூர்த்தி செய்ய மொத்த வாக்குகளை கணக்கிட மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பின் வரும் முறைகளில் அறியலாம்
 
ஒரு MLA- ன் வாக்கு மதிப்பு
= (மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை / மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த MLA) x (1 / 1000)

 
ஒரு MP யின் வாக்கு மதிப்பு
=அனைத்து மாநில MLA க்களின் மொத்த ஓட்டு மதிப்பு / பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை
 
(LS 543 + RS 233 = 776)

குடியரசுத்தலைவரின் தேர்தலானது “விகிதாச்சார பிரதிநிதித்துவ” முறையில் ஒற்றை மாற்று வாக்களிப்பில் மறைமுக தேர்தலாக நடைபெறும். இம்முறையில் வெற்றி பெறும் வேட்பாளர் முழுமையான பெரும்பான்மை பெற்று இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment