LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டின் பாலை நிலங்கள் மற்றும் வேளாண்மை

தமிழ்நாட்டின் பாலை நிலங்கள் மற்றும் வேளாண்மை

தமிழ்நாட்டின் பாலை நிலங்கள்


•    தமிழ்நாட்டின் காடுகள் அழிக்கப்படுவதாலும் மேற்கு தொடர்ச்சி மலை மழை மறைவு பிரதேசமாக இருப்பதாலும் பாலை நிலங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.
•    தமிழ்நாட்டில் தேனி மற்றும் போடி நாயக்கனூருக்கும் இடையே உள்ள கிராமங்கள் மேற்கு தொடர்ச்சிமலையின் மழை மறைவு பிரதேசமாகும். தற்போது இங்கு மணல் புயல் வீசுகின்றது.
•    தென் மேற்கு காற்றுகள் இப்பகுதியில் உழுது கிடக்கும் வயல்களில் இருந்து மண்ணை சேகரித்து ஆங்காங்கு மணல் மேடுகளை உருவாக்குகின்றது.

தமிழ்நாட்டின் வேளாண்மை

•    தமிழ்நாட்டில் 5.75 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் வேளாண்மை செய்ய உகந்த நிலங்கள் உள்ளது.
•    தமிழ்நாட்டில் உள்ள மண்ணில் பொட்டாஷியம் குறைவாக உள்ளது. எனவே அதிக பொட்டாஷியம் தேவைப்படுகிறது.
•    தமிழ்நாட்டில் 2007-2008 ஆம் ஆண்டிற்கான நெல் உற்பத்தி சுமார் 75.60 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும்.
•    தமிழ்நாட்டில் பருத்தி விளையும் மாவட்டங்கள் ஈரோடு, மதுரை, தேனி. திண்டுக்கல், திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் ஆகியவை ஆகும்.
•    தமிழ்நாட்டில் நீலகிரி, ஆணைமலை மற்றும் சேர்வராயன் மலைத் தொடர்களில் காபி பயிர் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் காபி பயிர் விளையும் பகுதிகளில் வெப்பகாலங்களில் பெய்யும் மழை பொதுவாக பூ பூக்கும் தூரல் என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment