LATEST

Wednesday, February 19, 2020

மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகார பங்கீடு

மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகார பங்கீடு

 மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகார பங்கீடு

மத்திய அரசு அதிகாரம்- பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரங்கள், படைப்போக்குவரத்து, தபால் தந்தி, நாணயம், பொதுமக்கள், வாணிபம், காப்புவரி, வருமானவிரி, கப்பல் போக்குவரத்து, மக்கள் தொகை கணக்கீடு, புள்ளியியல், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், சிவில், கிரிமினல் சட்டங்கள், மத சம்பந்தபட்ட நிர்வாகம்.

எஞ்சிய அதிகாரங்கள்

•    மத்திய மாநில அரசு பட்டியலில் குறிப்பிடப்படாத மற்ற துறைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டன.
 
மாநில அதிகாரங்கள் 2 வகை
1. ஒதுக்கப்பட்ட துறைகள்
2. மாற்றப்பட்ட துறைகள்

ஒதுக்கப்பட்ட துறைகள்

•    காவற்படை, நீதி நிர்வாகம், நில வருவாய், நீர்ப்பாசனம், பஞ்சநிவாரணம், பத்திரிக்கை, அச்சகம், புத்தகக்கட்டுப்பாடு, விவசாயக் கடன், வனங்கள், சிறைசாலை, தொழில் தகராறு தீர்த்தல், (National Building Department)
•    இவற்றை கவர்னரும் 4 உறுப்பினர்களை கொண்ட அவரது நிர்வாக சபையினரும் நிருவகிப்பர்.

மாற்றப்பட்ட துறைகள்

•    கல்வி, பொதுபணித்துறை, விவசாயம், மீன்வாரியம், தலசுயாட்சி, பொது சுகாதாரம், கூட்டுறவு சங்கங்கள், தொழில் துறைக்கு கல்வி, தொழிற்சாலை வளர்ச்சி, தொழில் ஆராய்ச்சி.
 
இவற்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிருந்து கவர்னரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நிருவகித்தனர்.
•    சென்னை, வங்காளம், பம்பாய், ஐக்கிய மாகாணம், பஞ்சாப், பீகார், மத்திய மாகாணம், அஸ்ஸாம் ஆகிய 8 மாநிலங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
•    சுயாட்சியின் படி மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமைச்சர்களுக்கு அதிக அதிகாராங்கள் வழங்கப்பட வேண்டும்.
•    வாக்குரிமை 3 சதவீதம் முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும்.
•    மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.
•    நடைமுறையில் ஏற்படுகிற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், அவ்வப்போது தோன்றுகின்ற தேவைகளை பூர்த்தி செய்யவும், அரசியலமைப்பானது நெகிழ்ச்சியுடைதாக (Flexible) சம்பந்தபட வேண்டும்.

அறிக்கையின் சிறப்பம்சங்கள்

•    டொமினியின் அந்தஸ்தை இந்தியா உடனடியாக அடைதல் வேண்டும். ஆனால் இது தற்காலிகமான ஏற்பாடே ஆகும். பூரண சுயராஜ்யமே இறுதி லட்சியமாகும்.
•    இந்தியாவில் அனைத்துப் பகுதிகளும் இணைந்த கூட்டாட்சி அரசாங்க முறை அமைக்கப்பட வேண்டும்.
•    மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குதல் வேண்டும்
•    சமய சார்பற்ற முறையில் அரசியலமைப்பு இருத்தல் வேண்டும். அரசு எந்த ஒரு மதத்திற்கும் தனிப்பட்ட முறையில் அங்கீகாரம் அளித்தல் கூடாது.
•    எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் பொறுப்பில் விடப்பட வேண்டும்
•    இந்திய சுதேச அரசுகள் அனைத்தும் பாராளுமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட இயங்க வேண்டும். ஒரு சுதேச அரசுக்கும் பாராளுமன்றத்துக்கும் பிரச்சனை ஏற்படமாயின் அதை Supreme court தீர்த்து வைக்க வேண்டும்.
•    இந்தியா Supreme court இறுதி மேல் முறையீட்டு மன்றமாக இருக்க வேண்டும்.
•    இந்தியப் பாதுகாப்பை நிர்வகிக்க ஒரு பாதுகாப்புக்கு அமைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment