LATEST

Friday, February 14, 2020

கிழக்குத் தொடர்ச்சி மலை

கிழக்குத்  தொடர்ச்சி மலை

•    மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன.
•    வடகிழக்கிலிருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகின்றன.
•    சராசரி உயரம் –1100மீ முதல் 1600மீ வரை
•    கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600மீ)
 
தமிழகத்தில்  கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1. ஜவ்வாது மலை
2. கல்வராயன் மலை
3. சேர்வராயன் மலை
4. பச்சை மலை
5. கொல்லி மலை
6. ஏலகிரி மலை
7. செஞ்சி மலை
 
ஜவ்வாது மலை: 

•    இது வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ஏலகிரி ஒரு கோடை வாழிடமாகும்.
 
கல்வராயன் மலை: 

•    இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இங்கு வெள்ளாற்றின் துணை ஆறுகள் உற்பத்தியாகின்றன.
 
சேர்வராயன் மலை: 

•    இம்மலை சேலம் மாவட்டத்தில் உள்ளது. இதன் உயர்ந்த சிகரம் சோலைக்காடு (1640மீ). இங்கு பாக்சைட் தாதுக்கள் கிடைக்கின்றன.இம்மலையில் அமைந்துள்ள ஏற்காடு ஒரு கோடை வாழிடமாகும். ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
 
பச்சை மலை: 

•    இது பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைகின்றது.
 
கொல்லி மலை: 

•    இம்மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இங்கு பாக்சைட் தாதுக்கள் கிடைக்கின்றன. இதனை மூலிகைகளின் ராணி, வேட்டைக்காரன் மலை என்றும் அழைப்பர்.
 
பாலமலைக் குன்று: 

•    பச்சை மலை மற்றும் கொல்லி மலைக்குக் கிழக்கில் பாலமலைக் குன்றுகள் காணப்படுகின்றன. இங்கும் கருங்கல் மற்றும் கல்தூள்கள் கிடைக்கின்றன.
•    கஞ்ச மலை மற்றும் சாக்குக் குன்றுகள் சேலம் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு இரும்புத் தாது மற்றும் மேக்னசைட் தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.
 
சித்தேரி மலை: 

•    இது தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
சென்னிமலை: 

•    இது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment