தமிழ்நாட்டின் பருவக் காலங்கள்
• தமிழ்நாட்டில் காணப்படும் 6 முக்கிய பருவங்கள் மற்றும் அவை நிலவும் மாதங்கள்:
1. கார்காலம்: ஆவணி – புரட்டாசி (ஆகஸ்ட் - அக்டோபர்)
2. குளிர் காலம்: ஐப்பசி, கார்த்திகை (அக்டோபர் - டிசம்பர்)
3. முன்பனிக் காலம்: மார்கழி – தை (டிசம்பர் - பிப்ரவரி)
4. பின்பனிக்காலம்: மாசி, பங்குனி (பிப்ரவரி – ஏப்ரல்)
5. இளவேனிற் காலம்: சித்திரை, வைகாசி (ஏப்ரல் - ஜூன்)
6. முதுவேனிற் காலம்: ஆனி – ஆடி (ஜூன் - ஆகஸ்ட்)

• தமிழ்நாட்டில் அரபிக் கடலைக் காட்டிலும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் சூறாவளி காரணமாக அதிக பாதிப்பையும் மழையையும் ஏற்படுத்துகின்றது
தமிழ்நாட்டின் மழைப்பொழிவு:
• தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு: 985.0 மி.மி
• தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவக் காற்றால் ஏற்படும் மழையின் சராசரி அளவு: 332.9 மி.மி
• தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவக் காற்றால் ஏற்படும் மழையின் சராசரி அளவு: 459.2 மி.மி
• தமிழ்நாட்டின் கிழக்கே ஏலக்காய்மலை அமைந்துள்ளதால், தமிழ்நாடு தென்மேற்கு பருவக் காற்றின் மழை மறைவு பிரதேசமாக அமைந்துள்ளது. எனவே தமிழ்நாட்டின் பகுதிகள் தென்மேற்கு பருவக் காற்றால் அதிக மழைப் பொழிவை பெற்று பலன் அடைவதில்லை.
நகர வெப்பத் தீவுகள்:
• தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி போன்ற நகரங்களில் மக்கள் தொகை மிக அதிகமாக பெருகி வருகின்றது.
• இவற்றின் காரணமாக அடர்த்தியான குடியிருப்புகள் மற்றும் மக்கள் தொகை அடர்த்தி ஆகியவை காரணமாக வெப்பம் உண்டாகின்றது. இவையே நகர வெப்பத் தீவுகள் எனப்படும்
No comments:
Post a Comment