தமிழ்நாட்டில் காணப்படும் மண் வகைகள்
• தமிழ்நாட்டில் பெருமளவு செம்மண் காணப்படுகிறது
• தமிழ் நாட்டில் உள்ள மண் வகைகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்:
• வண்டல் மண்: கடற்கரை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இம்மண் காணப்படுகின்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இம் மண் காணப்படுகின்றது. இது நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவை விளைவிக்க பயன்படுகிறது.

• கரிசல் மண்: இம்மண் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றது. இம்மண்ணில் பருத்தி, சோளம் மற்றும் கால்நடைத் தீவனங்கள் பயிர் செய்யப் படுகிறது
• செம்மண்: தமிழகத்தில் இம்மண் அதிகமாக காணப்படுகின்றது. காஞ்சிபுரம், கடலூர், வேலூர், இராமநாதபுரம், கோயம்புத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்iகு. விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இம் மண் காணப்படுகிறது. இம் மண்ணில் நீர் பாசன வசதியுடன் பயிர் செய்யப்படுகிறது. மண்ணில் உள்ள இரும்புச் சத்து தேய்வதால் செம்மண் ஏற்படுகின்றது.
• களிமண்: இம்மண் செங்கல் தயாரிக்க பயன்படுகின்றது. பிசு பிசுத் தன்மை காணப்படும்.
• உவர்மண்: கடற்கரை ஓரங்களில் காணப்படுகின்றது. வேதாரண்யம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது. இம்மண் கன்னியாகுமரியில் காணப்படுவது இல்லை. டைட்டானியம் சிறிதளவு காணப்படுகின்றது. திருவள்ளுர். காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் காணப்படுகிறது
No comments:
Post a Comment