மாநிலம் உருவாகுவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டிகள்
S.K தார் குழு (Dhar Commission) (1948)
• மொழிவாரி மாநிலங்கள் அமைக்க முடிவதற்கான சூழல்களை ஆராய ஜூன் 1948-ல் இந்திய அரசால் அமைக்கப்ட்டது.• இக்குழுவின் தலைவர் S.K. தார்.
• டிசம்பர் 1948-இல் இக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.
• இக்குழு நிர்வாக வசதிகளின் அடிப்படையிலேயே இந்தியா பிரிக்கப்பட்ட வேண்டுமேயன்றி மொழியின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தது.
ஜே.வி.பி. (J.V.P) குழு (1948)
• தார் குழுவின் அறிக்கை திருப்தி அளிக்காததால் இக்குழு காங்கிரஸால் டிசம்பர் 1948-இல் அமைக்கப்பட்டது.• J – Jawaharlal Nehru
• V – Vallabhai Patel
• P – Pattabhi Sitaramayya
• ஏப்ரல் 1949-இல் அறிக்கை சமர்ப்பித்த இக்குழுவும், மொழிவாரி மாநிலங்கள் பகுப்பதை நிராகரித்தது.
• எனினும் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் தனி ஆந்திர மாநிலம் கேட்டுப் போராடி 56 நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்பு 1953-இல் சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டு முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவானது.
பசல் அலி குழு (Fazl Ali Committee) (1953)
• இந்திய அரசாங்கம் டிசம்பர் 1953-ல் 3-நபர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு கமிஷனை நியமித்தது.• தலைவர் : பசல் அலி
• உறுப்பினர்கள் :கே.எம். பணிக்கர், கே.என். குன்ஷ்ரு
• இக்குழு மொழிவழி மாநில மறுசீரமைப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஒரு மொழி – ஒரு மாநிலம் என்னும் கொள்கையை நிராகரித்தது.
• இக்குழுவின் பரிந்துரையின் படி மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956) நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment