LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாடு வேளாண்மைத்துறை

தமிழ்நாடு வேளாண்மைத்துறை 

 தமிழ்நாடு வேளாண்மைத்துறை

•    நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தமிழகத்தில் உள்ளவர்கள் 7 சதவீதம் பேர். நாட்டின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் பரப்பு 4 சதவீதம் ஆகும். நாட்டின் மொத்த நீர்வளத்தில் 3 சதவீதமே தமிழ்நாட்டில் உள்ளது
•    மொத்த வேளாண்மை நிலப்பரப்பு 130.3 இலட்சம் ஹெக்டேர் ஆகும். இவற்றில் பயிரிடப்படுவது 58.89 இலட்சம் ஹெக்டேர் ஆகும்
•    தமிழகத்தில் வடகிழக்கு பருவ காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அதிக மழை பெறப்படுகிறது
•    மண்ணிலும் உரங்களிலும் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவை பகுப்பாய்வு செய்யும் கருவி அணுக்கதிர் ஈர்ப்பு அலை நிழற்படமானி ஆகும்
•    தமிழ்நாட்டில் வேளாண்மை மூலம் கிடைக்கும் வருவாய் நிகர உள் நாட்டு உற்பத்தியில் 17 சதவீதமாகும்
•    பண்ணகை, கழிவுகளை காம்போஸ்ட் உரமாக மாற்றப் பயன்படுவது பளுரோட்டஸ் பூஞ்சாணம் ஆகும்
•    நீலப்பச்சை பாசி மற்றும் அசோலா காற்றில் உள்ள தழைச் சத்தினை கிரகித்து நெற்பயிருக்கு கிடைக்கச் செய்யும்
•    பசுந்தாள் உரங்கள் எனப்படுவது தக்கைப்பூண்டு, சணப்பு, சீமை அகத்தி, கொளுஞ்சி ஆகியவை ஆகும்
•    மாநிலத்தின் மொத்த சாகுபடி பரப்பில் 2 சதவீதம் கரும்பு பயிரிடப்படுகிறது
•    தமிழ்நாட்டில் உள்ள மொத்த சர்க்கரை ஆலைகள் 38 ஆகும்
•    மாநில வேளாண் மேலாண்மை பயிற்சி நிலையம் குடுமியான் மலையில் உள்ளது
•    தென்னை நாற்றுப் பண்ணை வேலூர் மாவட்டம் நாவ்லாக் இராணிப்பேட்டை அருகே உள்ளது
•    தமிழகம் தோட்டக்கலை சாகுபடியில் நாட்டின் தேசிய பரப்பில் 5.3 சதவீதம் ஆகும்
•    தோட்டக்கலை விளைபொருள் உற்பத்தியில் 8.7 சதவீதம் ஆகும்
•    தோட்டக் கலை பயிற்pச மையம் உள்ள இடங்கள் திருவள்ளுர் மாவட்டம் மாதவரம், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் உதகை ஆகும்
•    தமிழகத்தின் கடற்கரை பகுதி 1076 கி. மீ ஆகும்.
•    முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைய உள்ள பகுதி கடலூர்
•    APEDA – Agricultural and Processed Food Products Exports Development Authority
•    உலகத்திலேயே முந்திரி அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா

No comments:

Post a Comment