LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாடு வேளாண்மைத் துறைத் திட்டங்கள்

தமிழ்நாடு வேளாண்மைத் துறைத் திட்டங்கள் 

 தமிழ்நாடு வேளாண்மைத் துறைத் திட்டங்கள்

•    தரிசு நில மேம்பாட்டுத்திட்டம்
•    செம்பான் சிலந்தி கட்டுப்படுத்தும் திட்டம்
•    மாற்றுப் பயிர் சாகுபடித் திட்டம்
•    செம்மை நெல் சாகுபடி முறை (SRI – System of Intensification)
•    மாற்றுப்பயிர்கள்: கட்டாமணக்கு (ஜெட்ரோபோ), சர்க்கரைச் சோளம் மற்றும் சர்க்கரைக் கிழங்கு
•    எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் திண்டிவனம்
•    புதிய வேளாண் அறிவியல் நிலையங்கள்
•   1. குப்பம் 2. விரிஞ்சிபுரம் 3. சிக்கல் 4. நீடா மங்கலம் 5. வம்பன் 6. இராமநாதபுரம் 7. பேச்சிப்பாறை 8. மதுரை 9. திண்டிவனம்
•    இஸ்ரேல் நாட்டின் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த ஏதுவாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு துல்லியப் பண்ணை திட்டம்
•    தமிழ் மலர் ஏற்றுமதி மண்டலங்கள் ஓசூர் மற்றும் நீலகிரி
•    மா ஏற்றுமதி மண்டலம்: தேனி
•    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உணவுப்பூங்கா
•    ஈரோடு மாவட்டம் - கவுந்தம் பாடி வெல்லம்

 சிறப்பு விற்பனை மையம்

•    ஈரோட்டில் நசியனூர் மற்றும் வில்லரசம் பட்டியில் மஞ்சள் வணிக வளாகம்
•    பல்லடத்தில் வெங்காய சேமிப்பு கிடங்கு தேனீ மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சை ஏற்றுமதி கிடங்கு
•    கிருஷ்ணகிரியில் மாம்பழ சேமிப்பு கிடங்கு 

தோட்டக் கலைப் பயிற்சி மையங்கள்

•    மாதவரம் 2. குடுமியான் மலை 3. பெரியகுளம்
•    முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை – கடமலைக்குண்டு
•    தேயிலை ஏலத்தை மின்னணு முறையில் நடத்தப்படும் திட்டத்திற்கு பெயர்: டீ செர்வ்
•    குன்னூர் கூட்டுறவு மரவள்ளிக்கிழங்கு சங்கம் - சேகோ சர்வ்
•    கரும்பு ஆராய்ச்சி நிலையம் உள்ள இடங்கள் கடலூர், சிறுகமணி, மேலாலத்தூர்
•    தென்னை ஆராய்ச்சி நிலையம் உள்ள இடங்கள் வேப்பங்களம், ஆழியார் நகர் ஆகும்
•    மண் மற்றும் நீர் நிர்வாக ஆராய்ச்சி நிலையம் தஞ்சாவூரில் உள்ளது
•    நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் திரூர் (திருவள்ளுர் மாவட்டம்) மற்றும் அம்பாசமுத்திரம்.
•    தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ளது
•    தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் கொடைக்கானல் மற்றும் பேச்சிப்பாறையில் உள்ளது
•    கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம் இராமநாதபுரத்தில் உள்ளது
•    மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் ஏத்தாப்பூரில் உள்ளது
•    காய்கறி ஆராய்ச்சி நிலையம் பாலூரில் உள்ளது.
•    முளை விட்ட பயிர் சோதனைப் பண்ணை கண்ணாம்பாளையம்
•    எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம் வம்பனில் உள்ளது
•    பருத்தி ஆராய்ச்சி நிலையம் திருவில்லிப்புத்தூரில் உள்ளது.

No comments:

Post a Comment