LATEST

Friday, February 14, 2020

காடுகள்

காடுகள் 

 பசுமையிலைக் காடுகள்
•    300 செ.மீ அதிகமாக மழை பெய்யுமிடத்தில் வளரும்
•    அஸ்ஸாம், கிழக்கு இயமலைத்தொடர், மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவுகளில் வளரும்.
•    தேக்கு, ரோஸ்வுட், எபோனி போன்ற உறுதியான மரங்கள் வளரும்

பருவ காற்றுக்காடுகள்
•    தக்காண பீடபூமியின் மேற்குப்புறம் உள்ளது.
•    100 செ.மீ – 200 செ.மீ. வரை மழை பெய்யும் இடத்தில் வளரும்.
•    இவை இந்தியாவில் இலையுதிர் காடுகள் எனப்படும்.
•    தேக்கு, சால், கருங்காலி, ஈட்டி, சந்தனம் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் வளரும்.
•    சந்தன மரம் மைசூர் காடுகளில் அதிகமாக வளருகிறது.
•    இந்தியாவில் அதிகமாக காணப்படும் காடுகள் இவையே.

மலைக்காடுகள்

•    இவை இமயமலை (அ) ஆல்பைன் காடுகள் எனப்படும்.
•    இமயமலை, தக்காண பீடபூமி ஆகிய உயரமான இடங்களில் வளரும்.
•    பிர், பைன், தேவதாரு ஆல்பைன் மரங்கள் வளரும்.

No comments:

Post a Comment