LATEST

Saturday, February 15, 2020

முக்கிய திட்டங்கள்

முக்கிய திட்டங்கள்

•    மதிய உணவுத் திட்டம்: முதலமைச்சர் காமராஜர் அவர்களால் 1906ல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது
•    சத்துணவுத் திட்டம்: முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1982ல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது
•    சமத்துவபுரம்: முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 1997ல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் திறக்கப்பட்டது
•    மூன்று முட்டைகள் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.7.2007 முதல் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
•    இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்: முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 15.9.2006 அன்று முதல் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது
•    கல்வி வளர்ச்சி நாள்: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.7.2007 கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
•    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை:
•    2001ஆம் ஆண்டு தமிழகத்தின் மக்கள் தொகை 624.06 இலட்சம். இதில் ஆதி திராவிடர் 118.58 இலட்சம் (19 விழுக்காடு) ஆகும். பழங்குடியினர் 6.51 இலட்சம் (1.04 விழுக்காடு) ஆகும்.
•    தமிழகத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 73.45 சதவீதம் ஆகும். ஆதி திராவிட மக்களின் எழுத்தறிவு விகிதம் 63.19 ஆகும். பழங்குடி மக்களின் எழுத்தறிவு விகிதம் 41.53 ஆகும்
•    1955 குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்
•    1976 கொத்தடிமை ஒழிப்புச் சட்டம்
•    1989 வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்
•    தமிழ்நாட்டில் உள்ள மக்கிய பழங்குடியினர்கள் தோடா, கோட்டாஸ், குரும்பாஸ், காட்டு நாயக்கன், இருள் மற்றும் பனியன்
•    விழுப்புரம் மாவட்டத்தில் கல்வராயன் மலை உள்ளது. அதில் வெள்ளி மலை அடங்கியுள்ளது.
•    பழங்குடியினருக்கு ஆராய்ச்சி மையம் உதக மண்டலத்தில் உள்ளது
•    தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் 20.4.2007
•    இந்திய அரசியல் அமைப்பின் பிரிவுக்கூறு 275 (1) பழங்குடியினர் நலன்களைக் குறிக்கின்றது
•    மனித நேய வார விழா தமிழகத்தில் சனவரி 24ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது
•    லோம்ப் - பெரிய அளவிலான பல் நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்
•    பழங்குடியினர் அருங்காட்சியகம் உள்ள இடம் அரியலூர் மற்றும் உதகை

No comments:

Post a Comment