துணைக் குடியரசுத்தலைவரின் பதவி பிரமானம்( Art-69),
பதவிக்காலம்,
அதிகாரங்கள் - பணிகள்
பதவி பிரமானம்( Art-69)
• குடியரசுத் தலைவர் அல்லது அவரால் அவருடைய சார்பில் அதற்கென நியமிக்கப்படும் ஒருவர் முன்பு பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்.
பதவிக்காலம்( Art - 67)
• பதவிகாலம் 5 ஆண்டுகள்
• பதவி விலக விரும்பினால் தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவரியிடம் அனுப்ப வேண்டும்.
• இவரை பதவிநீக்கம் செய்யவேண்டுமானால் மாநிலங்களவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ராஜ்யசபாவின் மொத்த உறுப்பினர்களின் பெருபாண்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மக்கள் அவையின் ஒப்புதல் பெற வேண்டும்.
• துணைக் குடியரசுத் தலைவர் எத்தனை முறை வேண்டுமானலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
துணைக் குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் - பணிகள்.
• ராஜ்யசபாவின் தலைவராக பணியாற்றுகிரார்.
• ராஜ்சபாவின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.
• இவருடைய அதிகாரங்களும் பணிகளும் லோக்சபா சபாநாயகர் பணிகளுக்கு சமமானவை.
• குடியரசுத் தலைவர் இறந்து விட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ (அ) நோய்வாய்பட்டிருந்தாலே துணை குடியரசுத் தலைவர் அதிக பட்சமாக ஆறு மாத காலத்திற்கு குடியரசுத் தலைவராகப் பணியாற்றலாம்.
• குடியரசுத் தலைவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றாலோ குடியரசுத் தலைவரின் பணிகளை இவர் செய்கிறார்.
• தற்காலிக குடியரசுத் தலைவராக பணியாற்றும் போது ராஜ்சபா தலைவருக்கான கடமைகள் மற்றும் பணிகள் இவர் செய்யலாது. ஆதலால் ராஜ்யசபா துணைத்தலைவர் ராஜ்யசபா தலைவராக பணியாற்றுவார்.
• இந்தியக் கலாச்சாரத்தின் தூதுவராக உலக நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கு மிடையே நட்புறவை வளர்க்கிறார்.
No comments:
Post a Comment