LATEST

Saturday, March 14, 2020

இந்திய குடியரசு தலைவர்கள்

இந்திய குடியரசு தலைவர்கள்


1. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1950–1962)
•    இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்
•    தொடர்ந்து இரண்டு முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
 

2. டாக்டர் ராதா கிருஷ்ணன் (1962–1967)
•    இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர்
 
3. டாக்டர் ஜாகீர் உசேன் (1967–1969)
•    முதல் இஸ்லாமிய குடியரசு தலைவர்
•    பதவியில் இருக்கும்போதே காலமானவர்
 
4. வி.வி. கிரி (1969–1974)
•    வாழும் போது தபால் தலை வெளியிட்டவர்
•    குடியரசுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக குடியரசுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர்
 
5. பக்ரூதீன் அலி முகமது (1974–1977)
•    அவசரநிலை பிரகடனசட்டத்தில் கைஎழுத்து போட்டவர்
 
6. நீலம் சஞ்சீவ ரெட்டி (1977–1982)
•    போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்
 
7. கியானி ஜெயில் சிங் (1982–1987)
•    குடியரசுத் தலைவரான முதல் சீக்கியர்
•    ராஜீவ் அமைச்சரவையால் அனுப்பபட்ட தபால் துறை மசோதாவை கையொப்பமிடாமல் திருப்பி அனுப்பியவர்
 
8. ஆர் வெங்கட்ராமன் (1987–1992)
•    ராஜீவ் காந்தி, வி.பி. சிங் சந்திரசேகர் பி.வி. நரசிம்மராவ், நான்கு பிரதமர் ஆட்சியை சந்தித்தவர்.
 
9. சங்கர் தாயள் சர்மா (1992 – 1997)
•    விடுதலை வீரர்
 
10. கே.ஆர். நாராயணன் (1997–2002)
•    நாட்டின் முதல் தலீத் குடியரசு தலைவர்
•    மக்களவைத் தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர்.
 
11. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (2002–2007)
•    குடியரசு தலைவரான முதல் விஞ்ஞானி
•    நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்தவர்
 
12. திருமதி. பிரதீபா பாட்டீல் (2007–2012)
•    முதல் பெண் குடியரசு தலைவர்
 
13. திரு. பிரனாப் முகர்ஜி (2012 – 2015)
•    பாராளுமன்றத்தின் நிதியமைச்சர் பதவியில் இருந்து தேர்ந்து எடுக்க பட்டவர்
 
14. ராம் நாத் கோவிந்த் (2015 ஜீலை 25 – இன்றும்)
•    இவர் 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார்.
•    1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

•    குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன் வெளிநாட்டு தூதுவராக பணியாற்றியவர்கள் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர். கே.ஆர்.நாராயணன்.
•    குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பே ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர்கள் டாக்டர். ராதாகிருஷ்ணன் டாக்டர். ஜாகிர் ஹசைன் மற்றும் டாக்டர். அப்துல் கலாம்.
•    குடியரசுத் துணைத் தலைவர் பதவி வகிக்காமலே நேரடியாக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் டாக்டர். ராஜேந்திர பிரசாத், பஹ்ருதின் அலி அஹமது, நீலம் சஞ்சீவ் ரெட்டி, கியானி ஜெயில் சிங், டாக்டர். அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல்.
•    இதுவரை தற்காலிக குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்துள்ள ஒரே இந்திய தலைமை ஜஸ்டிஸ் முகமது ஹிதயதுல்லா.

No comments:

Post a Comment