LATEST

Thursday, April 9, 2020

பொது தமிழ் வினா விடை 01

பொது தமிழ் வினா விடை 01

1. சரியானவற்றைக் காண்க
1. யான் + கு = எனக்கு
2. யான் + கண் = என்னின்கண்
3. யான் + அது = என்னது
4. யான் + ஆல் = என்னால்
(A) 2, 3 – சரி
B) 1, 2 – சரி
(C) 1, 4 – சரி
(D) நான்கும் சரி
Ans: - (C) 1, 4 – சரி
 
2. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
தொழிற்பெயர்
(A) காலங்காட்டாது
(B) மூவிடங்களிலும் வரும்
(C) தொழிலுக்குப் பெயராய் வரும்
(D) இருவகைப்படும்
Ans: - (B) மூவிடங்களிலும் வரும்
 
3. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்குரிய சரியான பொருள் எது?
‘கவிகை’
(A) தேவருலகம்
(B) கவிதை
(C) பாட்டு
(D) குடை
Ans: - (D) குடை
 
4. கொடுக்கப்பட்ட சொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க.
(A) மான் குட்டி
(B) சிங்கக் குருளை
(C) கீரிக் குட்டி
(D) கழுதை கன்று
Ans: - (B) சிங்கக் குருளை
 
5. கீழக்காணும் ‘வல்லினம் மிகா இடம்’ குறித்த இலக்கணக்கூற்றில் பிழையான கூற்று எது?
(A) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது
(B) வினைத் தொகையில் வல்லினம் மிகாது
(C) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது
(D) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
Ans: - (B) வினைத் தொகையில் வல்லினம் மிகாது 
 
6. PROJECTOR – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்தெடுக்க
(A) படப்பிடிப்பு
(B) படப்பிடிப்புக் கருவி
(C) பட வீழ்த்தி
(D) பார்வை நிலைப்பு
Ans: - (C) பட வீழ்த்தி
 
7. மரபுத் தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“ஆகாயத் தாமரை”
(A) அலைந்து திரிதல்
(B) இல்லாத ஒன்று
(C) பயனின்றி இருத்தல்
(D) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது
Ans: - (B) இல்லாத ஒன்று
 
8. இலக்கணக்குறிப்பு அறிக
கெடுப்பதூஉம்
(A) இன்னிசை அளபெடை
(B) இசைநிறை அளபெடை
(C) சொல்லிசை அளபெடை
(D) செய்யுளிசை அளபெடை
Ans: - (A) இன்னிசை அளபெடை
 
9. “பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை”
கீழ் உள்ள விடைகளில் சரியான விடையை எழுதுக.
(A) எதுகை மட்டும் வந்துள்ளது
(B) எதுகையும் இயைபும் வந்துள்ளது
(C) மோனையும் எதுகையும் வந்துள்ளது
(D) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது.
Ans: - (D) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது.
 
10. விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக.
(A) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?
(B) திரைப்படம் எடுப்பதனைவிட எந்தப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?
(C) திரைப்டம் எடுப்பதனைவிட கடினமான பணி எது?
(D) திரைப்படம் எடுப்பதனைவிட எவ்வகைப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?
Ans: - (A) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

No comments:

Post a Comment