LATEST

Tuesday, April 7, 2020

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 02

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 02

1. பின்வருவனவற்றில் சுதந்திராக் கட்சியைப் பற்றி தவறானவை எதுஃஎவை?
1. அக்கட்சி சுதந்திர தனியார் துறையை ஆதரித்தது.
2. அக்கட்சி பொருளாதார வளர்ச்சியில் அரசின் முனைப்பான ஈடுபாட்டை ஆதரித்தது
3. அக்கட்சி மைய திட்டமிடலை எதிர்த்தது
4. அக்கட்சி தனியார் துறையை தேசியமயமாக்குவதை ஆதரித்தது. 
 
2. யார் இந்திய கவர்னர் ஜெனரலாக இருக்கும் போது அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
(A) வில்லியம் வில்பர்போர்க்ஸ் பர்ட் பிரபு
(B) ஆஃக்லாந்து பிரபு
(C) எலன்பரோ பிரபு
(D) ஹார்டிங் பிரபு
 
3. போர்த்துகீசியர் மும்பையை எந்த சூழலில் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்?
(A) ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்ற போர்ச்சுகளுடன் பிரிட்டிஷ் சுமூக உறவை வளர்த்துக் கொள்வதற்காக
(B) சார்லஸ் II போர்த்துகீசிய இளவரசி கேத்தரின் ப்ரகன்சாவை திருமணம் செய்து கொண்டதற்காக
(C) பிரிட்டிஷ் 1588-ல் ஸ்பானிஸ் ஆர்மெடாவை வெற்றிக் கொண்டதற்காக
(D) 1630-ல் ஏற்பட்ட மாட்ரிட் ஒப்பந்தத்தின்படி
 
4. எந்த ஆண்டு சென்னைக்கும் ஆற்காட்டிற்கும் இடையே இருப்பு பாதை போடும் பணி துவக்கப்பட்டது?
(A) கி.பி. 1853
(B) கி.பி. 1854
(C) கி.பி. 1856
(D) கி.பி. 1857
 
5. இந்திய தேசீய காங்கிரசின் இரண்டாவது மாநாடு நடைபெற்ற இடம்
(A) மெட்ராஸ்
(B) கல்கத்தா
(C) பம்பாய்
(D) டெல்லி
 
6.கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலடப்பட்ட ஆண்டு
(A) 1769
(B) 1779
(C) 1789
(D) 1799

7. சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையிடங்களை அமைத்தது.
(A) நேபாளம் மற்றும் ரங்கூன்
(B) ரங்கூன் மற்றும் சிங்கப்பூர்
(C) சிங்கப்பூர் மற்றும் திபெத்
(D) டோக்கியோ மற்றும் நேபாளம்
 
8. இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது கீழ்க்கண்ட அரசியல் கட்சிகளில் எந்தக்கட்சி இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்தது?
(A) கன்சர்வேடிவ் கட்சி 
(B) சோஷியலிஸ்ட் கட்சி
(C) லேபர் கட்சி 
(D) லிபரல் கட்சி

9. கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு
1. சுவாமி இராமகிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் போதனைகளிலிருந்து இராமகிருஷ்ண மடாமானது கொள்கைகள் மற்றும் கருத்துக்களை பெற்றது.
2. சுவாமி இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ண மடத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
(A) 1 மட்டுமே சரியாகும்
(B) 2 மட்டுமே சரியாகும்
(C) 1 மற்றும் 2ம் சரியாகும்
(D) 1 மற்றும் 2ம் தவறாகும்
 
10. வரலாற்றுச் சிறப்புமிக்க பிராமணரல்லாதார் பிரகடனத்தை 1916ல் வெளியிட்டவர் யார்?
(A) தியாகராஜ செட்டியார் 
(B) நடேச முதலியார்
(C) சங்கரன் நாயர் 
(D) ஈ.வெ. ராமசாமி நாயக்கர்  
விடைகள்
1.C
2. C
3. B
4. C
5. B
6. D
7. B
8. C
9. A
10. A 

No comments:

Post a Comment