LATEST

Thursday, April 9, 2020

பொது தமிழ் வினா விடை 06

பொது தமிழ் வினா விடை 06

1. “பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டியிருக்கின்றன” இத்தொடரானது எம்மொழி வகையைச் சார்ந்தது?
(A) தனி மொழி
(B) செம்மொழி
(C) தொடர் மொழி
(D) பொது மொழி
Ans: - (C) தொடர் மொழி
 
2. பின்வரும் இலக்கணக்குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க :
உரிச்சொற்றொடர் 
(A) நெடுநாவாய்
(B) நனி கடிது
(C) நன்னுதல்
(D) நின்கேள்
(A) Ans: - (B) நனி கடிது

3. உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது - இது எவ்வகையானத் தொடர்?
(A) தன்வினைத் தொடர்
(B) பிற வினைத்தொடர்
(C) செய்வினைத் தொடர்
(D) செயப்பாட்டு வினைத்தொடர்
Ans: - (C) செய்வினைத் தொடர்
 
4. சொற்களை இரண்டு முதல் ------------------- உறுப்புகளாகப் பகுக்கலாம்?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
Ans: - (D) 6
 
5. ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தருவது?
(A) ஓரெழுத்து ஒரு மொழி
(B) சொல்
(C) கிளவி
(D) மொழி
Ans: - (A) ஓரெழுத்து ஒரு மொழி
 
6. முதற் பொருளாவது
(A) நிலமும் பொழுதும்
(B) அகமும் புறமும்
(C) உயிரும் மெய்யும்
(D) திணையும் ஒழுக்கமும்
Ans: - (A) நிலமும் பொழுதும்
 
7. இலக்கணத்தில் பொருளாவது யாது?
(A) செல்வம்
(B) ஒழுக்க முறை
(C) அடக்கம்
(D) அறிவு
Ans: - (B) ஒழுக்க முறை
 
8. தலைவன் - இச்சொல்லில் ஐகாரம் --------------- மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.
(A) ஒன்றரை
(B) ஒரு
(C) அரை
(D) இரண்டு
Ans: - (B) ஒரு
 
9. மதில்போர் பற்றிய புறத்திணைகளுக்குரிய புறப்பொருளைத் தேர்க :
(A) வட்கார்மேற் செல்வது, எதிரூன்றல்
(B) நிரைகவர்தல், மீட்டல் 
 (C) எயில்காத்தல், வளைத்தல்
(D) அதிரப்பொருவது, செருவென்றுத
Ans: - (C) எயில்காத்தல், வளைத்தல்
 
10. நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை
எவ்வகைச் சொற்றொடரைச் சார்ந்தது?
(A) செய்தித் தொடர்
(B) தனிநிலைத்தொடர்
(C) கலவைத் தொடர்
(D) தொடர்நிலைத் தொடர்
Ans: - (C) கலவைத் தொடர்

No comments:

Post a Comment