LATEST

Thursday, April 9, 2020

பொது தமிழ் வினா விடை 07

பொது தமிழ் வினா விடை 07

1. ‘கால்நகம் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும்’
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.
(A) உம்மைத் தொகை
(B) வினைத்தொகை
(C) எண்ணும்மை
(D) இழிவு சிறப்பும்மை
Ans: - (C) எண்ணும்மை
 
2. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
(A) நாலடியார்
(B) நான்மணிக்கடிகை
(C) பழமொழி
(D) கலித்தொகை
Ans: - (C) பழமொழி
 
3. இலக்கணக்குறிப்பறிதல்
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
வினைத்தொகை
(A) பொங்குதாமரை
(B) பூதரப்புயம்
(C) அலைகடல்
(D) அகல்முகில்
(A) Ans: - (B) பூதரப்புயம்


4. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
நான் வாங்கிய நூல் இது அல்ல
(A) நான் வாங்கிய நூல் இஃது அல்ல
(B) நான் வாங்கிய நூல் இஃது அன்று
(C) நான் வாங்கிய நூல் இது அன்று
(D) நான் வாங்கின நூல் இது அன்று
Ans: - (B) நான் வாங்கிய நூல் இஃது அன்று
 
5. நற்றிணை -------------- சிற்றெல்லையும் ---------------- பேரெல்லையும் கொண்ட நூல்
(A) 4, 8
(B) 3, 6 
 (C) 9, 12
(D) 13, 31
Ans: – (C) 9, 12
 
6. முதல் சமய காப்பியம் எது?
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) வளையாபதி
(D) குண்டலகேசி
Ans: - (A) மணிமேகலை
 
7. பொருத்தமான விiயைத் தேர்வு செய்க.
‘தௌளு தமிழ்நடை சின்னஞ்சிறிய
இரண்டடிகள்’ – திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்?
(A) திரு.வி.க
(B) ஒளவையார்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
Ans: - (D) பாரதிதாசன்
 
8. வீரமாமுனிவர் பிறந்த நாடு
(A) பாரிசு
(B) இத்தாலி
(C) இங்கிலாந்து
(D) சுவிச்சர்லாந்து
Ans: - (B) இத்தாலி
 
9. ‘இனியவை நாற்பது’ நூலின் ஆசிரியர் யார்?
(A) தாயுமானவர்
(B) சச்சிதானந்தன்
(C) பூதஞ்சேந்தனார்
(D) கபிலர்
Ans: - (C) பூதஞ்சேந்தனார்
 
10. ‘அம்மானை’ என்பது ----------- விளையாடும் விளையாட்டு
(A) ஆண்கள்
(B) பெண்கள்
(C) குழந்தைகள்
(D) பெரியவர்கள்
Ans: - (B) பெண்கள்

No comments:

Post a Comment