LATEST

Thursday, April 9, 2020

பொது தமிழ் வினா விடை 08

பொது தமிழ் வினா விடை 08

1. முருகனால் சிறையிலிடப்பட்டவன்
(A) நான்முகன்
(B) சிவன்
(C) திருமால்
(D) இந்திரன்
Ans: - (A) நான்முகன்
 
2. திருக்குறள் ------------- நூல்களுள் ஒன்று
(A) பதினெண் கீழக்கணக்கு
(B) பத்துப்பாட்டு 
 (C) எட்டுத்தொகை
(D) பக்தி நூல்
Ans: - (A) பதினெண் கீழக்கணக்கு
 
3. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் உள்ளன?
(A) 79
(B) 99
(C) 119
(D) 9
Ans: - (B) 99
 
4. ‘மூவருலா’ எந்த மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டது?
(A) சேரர்
(B) சோழர்
(C) பாண்டியர்
(D) பல்லவர்
Ans: - (B) சோழர்
 
5. ‘வளன்’ என்னும் பெயரால் அழைக்கப்பெறுபவர்
(A) சூசை
(B) பீட்டர்
(C) டேவிட்
(D) சேவியர்
Ans: - (A) சூசை
 
6. நூலின் 97 வெண்பாவிலும் மனநோய் போக்கும் 5 கருத்துகள் கொண்டது
(A) மலைபடுகடாம்
(B) சிறுபஞ்சமூலம்
(C) ஏலாதி
(D) திரிகடுகம்
Ans: - (B) சிறுபஞ்சமூலம்
 
7. களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என 3 பகுதிகளை உடைய நூல்
(A) புறநானூறு
(B) அகநானூறு
(C) பரிபாடல்
(D) பதிற்றுப்பத்து
Ans: - (B) அகநானூறு
 
8. ‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று’ என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்
(A) நற்றிணை
(B) ஐங்குறுநூறு
(C) குறுந்தொகை
(D) அகநானூறு
Ans: - (C) குறுந்தொகை
 
9. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்’ எனப் போற்றப்படுவது
(A) தேம்பாவணி
(B) இரட்சண்ய யாத்ரீகம்
(C) இரட்சண்ய மனோகரம்
(D) கிறித்துவின் அருள்வேட்டல் 
Ans: - (A) தேம்பாவணி
 
10. இயேசுபெருமானின் வளர்ப்புத் தந்தை யார்?
(A) அந்தோணியார்
(B) சூசை
(C) தாவீது
(D) பேதுரு
Ans: - (B) சூசை

No comments:

Post a Comment