LATEST

Thursday, April 9, 2020

பொது தமிழ் வினா விடை 09

பொது தமிழ் வினா விடை 09

1. ‘திருத்தொண்டர் புராணம்’ எனும் பெரியபுராணத்துக்கு முதனூலாக அமைந்தது எது?
(A) திருத்தொண்டத்தொகை
(B) திருவாசகம்
(C) திருமந்திரம்
(D) திருக்கோவையார்
Ans: - (A) திருத்தொண்டத்தொகை
 
2. நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் எது?
(A) நான்மணிக்கடிகை
(B) நாலடியார்
(C) இன்னா நாற்பது
(D) இனியவை நாற்பது
Ans: - (B) நாலடியார்
 
3. கருதிமுதல் - என்ற சொல்லின் பொருள் யாரைக் குறிக்கின்றது?
(A) யூதர்
(B) இயேசு நாதர்
(C) சீடர்
(D) குற்றவாளி
Ans: - (B) இயேசு நாதர்
 
4. சொல்லின் தோன்றும் குற்றங்கள் எத்தனை?
(A) 3
(B) 4
(C) 6
(D) 10
Ans: - (B) 4
 
5. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர்
(A) நக்கீரன்
(B) பரஞ்சோதி முனிவர்
(C) தருமி
(D) சிவபெருமான்
Ans: - (B) பரஞ்சோதி முனிவர்
 
6. சிறுபஞ்சமூலம் என்ற நூலில் கடவுள் வாழத்துடன் ------------- வெண்பாக்கள் உள்ளன.
(A) தொண்ணூற்றொன்பது
(B) தொண்ணூற்றேழு
(C) தொண்ணூற்றாறு
(D) நூற்றெட்டு
Ans: - (B) தொண்ணூற்றேழு
 
7. ‘ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய பருவம் எது? 
 (A) அம்மானை
(B) ஊசல்
(C) சிறுதேர்
(D) கழங்கு
Ans: - (C) சிறுதேர்
 
8. ‘நான்’ என்பது நான்காம் வேற்றுமை உருபு பெற்றால் -------- என ஆகும்.
(A) என்னை
(B) என்னால்
(C) எனக்கு
(D) நின்னை
Ans: - (C) எனக்கு
 
9. பொருந்தாததை எழுதுக.
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்
(A) உலா
(B) கோவை
(C) பிள்ளைத்தமிழ்
(D) பரணி
Ans: - (C) பிள்ளைத்தமிழ்
 
10. ‘சாமிநாதன்’ என்று ஆசிரியரால் பெயரிடப்பட்டவர்
(A) அம்பேத்கர்
(B) காமராசர்
(B) உ.வே.சா
(D) அண்ணா
Ans: - (B) உ.வே.சா

No comments:

Post a Comment