LATEST

Thursday, April 9, 2020

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 12

இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 12

1. முடிவுகளை எடுப்பதற்கான தரவுகளை சுருக்கியோ அல்லது மாற்றியோ உபயோகப்படுத்தும் தரவு ____________ ஆகும்
(A) நிகழ்பாடுகள்
(B) மூல தரவு
(C) படதரவு
(D) தகவல்

2. பின்வரும் கூற்றுகளில் எதுஃஎவை சரியானவை?
1. திருகு அளவியைக் கொண்டு, மிகச் சிறிய பொருள்களின் பரிமாணங்களை அளவிடலாம்.
2. லேசர் துடிப்பு முறையின் மூலம் மிக நீண்ட தொலைவுகளை அளவிடலாம்.
3. திருகு அளவியைக் கொண்டு, துணிக்கடையில், சட்டைத் துணிகள் அளக்கப்படுகின்றd.
4. மெல்லியக் கம்பியின் விட்டத்தை, திருகு அளவியைக் கொண்டு அளவிடலாம்.
(A) 1 மற்றும் 3
(B) 2 மற்றும் 4
(C)2, 3 மற்றும் 4
(D) 1, 2 மற்றும் 4

3. பொது கூட்டங்களில் குழல் விளக்குகள் ___________ இணைப்பிலும் சீரியல் விளக்குகள் _______________ இணைப்பிலும் இணைக்கப்பட வேண்டும்.
(A) பக்கஇணைப்பு தொடரிணைப்பு
(B) தொடரிணைப்பு, பக்கஇணைப்பு
(C) பக்கஇணைப்பு, பக்கஇணைப்பு
(D) தொடரிணைப்பு, தொடரிணைப்பு

4. சரியான விடையை தேர்வு செய்:
ஒரு பொருளின் வேகம் இருமடங்காகும் பொழுது அதன் இயக்க ஆற்றல்
(A) இரு மடங்காகும்
(B) பாதியாகும்
(C) நான்கு மடங்காகும்
(D) கால் மடங்காகும்

5. கோல்ட் (தங்கம்) ______________ ல் மட்டும் கரையும்
(A) நைட்ரிக் அமிலம்
(B) சல்ஃபூரிக் அமிலம்
(C) ஹைடிரோகுளோரிக் அமிலம்
(D) இராஜ திராவகம்

6. 100 W மின்திறனில் மின் விசிறி ஒன்று 220 ஏ-ல் தினமும் 5 மணிநேரம் இயங்கும் பொழுது, 30 நாட்கள் கொண்ட மாதத்ததில் அது எடுத்துக் கொள்ளும் மின் அளவு
(A) 1.5 kWh
(B) 15000 kWh
(C) 15 kWh
(D) 30 kWh

7. ‘மாற்று எஸ்டராக்கப்படுதல்’ என்ற வேதியியல் முறையில் தருவிக்கப்படும், உயிரிய சிதைவடையும் எரிபொருள் எது?
(A) பயோ டீசல்
(B) கரி வாயு
(C) இயற்கை வாயு
(D) வெண்மை வாயு

8. சரியான சொற்றொடர்(களை) காண்க
1. Zr-Hf மற்றும் Nb-Ta இணைகளின் ஆரமதிப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாயிருக்கும்.
2. இட்டிரியம் எப்போதும் கனமான லேந்தனைடுகளோடேயே இணைந்து கிடைக்கும்.
3. லேந்தனைடு குறுக்கத்தால் La(OH)3ன் காரத்தன்மை Lu(OH)3 காரத்தன்மையை விட குறைவாக இருக்கும்.
4. மூன்றாம் வரிசை இடைநிலைத் தனிமங்களின் அடர்த்தி இரண்டாம் வரிசை தனிமங்களைவிட குறைவு.
(A) 2 மற்றும் 3 (B) 1 மற்றும் 2
(C) 4 மட்டும் (D) 3 மற்றும் 4

9. சுவாசத்திலில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படும் அளவிற்கும், ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ளப்டும் அளவிற்குமான விகிதம் இவ்விதமாக அழைக்கப்படும்.
(A) ஒளிச்சுவாசம்
(B) சுவாவ ஈவு
(C) பாஸ்பாரிலேஷன்
(D) ஆக்ஸிகரணம்

10. NJAC என்பது
(A) தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்
(B) தேசிய சணல் மதிப்பீட்டுக் குழு
(C) தேசிய சிறார் மதிப்பீட்டுக் நீதிமன்றம்
(D) தேசிய சட்ட நிர்வாக குழு
 
விடைகள்
1. D
2. D
3. A
4. C
5. D
6. C
7. A
8. B
9. B
10. A

No comments:

Post a Comment