LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 15

பொது அறிவியல் வினா விடைகள் 15

1. நடு மூளையின் முதுகு பக்கத்தில் நான்கு அரைவட்டக்
கோளங்கள் காணப்படுகின்றன. அவற்றிற்கு என்ன பெயர்?
(a) கார்பஸ் கலோசம்
(b) கார்போராகுவாட்ரி ஜெமினா
(c) டெம்போரல் கதுப்பு
(d) சல்கஸ்

2. தண்டுவடத்தின் கீழ் மூளை நாரிழை போல உள்ளது. இதற்கு -----
----- என்று பெயர்?
(a) முடிவு நார் பகுதி
(b) முடிவு நார் நீட்சி
(c) முடிவுப் பகுதி
(d) டெம்போரல் பகுதி

3. மூளையிலிருந்து எத்தனை கபால நரம்புகள் உருவாகின்றன?
(a) 10 இணை
(b) 12 இணை
(c) 8 இணை
(d) 32 இணை

4. தண்டு வடத்திலிருந்து எத்தனை தண்டுவட நரம்புகள்
உருவாகின்றன?
(a) 30 இணை
(b) 32 இணை
(c) 31 இணை
(d) 12 இணை

5. நாளமில்லா குழுவின் நடத்துனர் என அழைக்கப்படுவது எது?
(a) பினியல் சுரப்பி
(b) பிட்யூட்டரி சுரப்பி
(c) தைராய்டு சுரப்பி
(d) தைமஸ் சுரப்பி

6. பொதுவாக வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?
(a) FSH
(b) TSH
(c) ACTH
(d) STH/GH

7. கிராபியன் ஃபாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபடுதல் என்ற அண்ட வெளியீட்டு நிகழ்ச்சியை செய்யும் ஹார்மோன் எது?
(a) STH
(b) LH
(c) LTH
(d) ACTH

8. பெண்களில் கருப்பையை சுருக்கியும் விரிவடையச் செய்தும்
மகப்பேறு நிகழ்ச்சியைத் துரிதப்படுத்துகிற பணியைச் செய்வது எது?
(a) வாஸோபிரஸ்ஸின்
(b) ஆன்டிடையூரிடிக் ஹார்மோன்
(c) ஆக்ஸிடோசின்
(d) லேக்டோஜீனிக் ஹார்மோன்

9. கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இருபுறமும் பக்கத்திற்கு
ஒன்றாக இரு கதுப்புகளை உயைட அமைப்பு எது?
(a) தைராய்டு சுரப்பி
(b) பிட்யூட்டரி
(c) தைமஸ் சுரப்பி
(d) பாரா தைராய்டு

10. குழந்தைப் பேற்றிற்கு பிறகு பால் உற்பத்தியை தூண்டும்
ஹார்மோன் எது?
(a) லூட்டினைசிங் ஹார்மோன்
(b) அட்ரினோ கார்ட்டிகோரோபிக் ஹார்மோன்
(c) பாலிக்கள் செல்களை தூணடும் ஹார்மோன்
(d) லேக்டோஜீனிகக் ஹார்மோன்

விடைகள்
1.B 
2.B 
3.B 
4.C 
5.B
6.D 
7.B 
8.C 
9.A 
10.D

No comments:

Post a Comment