பொது அறிவியல் வினா விடைகள் 16
1. இந்திய வனக் கழுதை எங்கு காணப்படுகிறது?
(a) உயர்ந்த மலைகள்
(b) துந்திரப் பகுதி
(c) பாலைவனம்
(d) கடல் நீர்
2. பீவர், பிளாஸ்டிபஸ் போன்றவை எங்கு காணப்படுகின்றன?
(a) கடல் நீர்
(b) நன்னீர்
(c) துந்திரப் பகுதி (d) சமவெளி
3. இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்?
(a) வில்லியம் ஹார்வி
(b) ஜேம்ஸ் வில்லியம்ஸ்
(c) எட்வர்ட் ஜென்னர்
(d) இவர்களுள் யாருமில்லை
4. இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
5. ஈரிதழ் வால்வு ------------------ என்றும் அழைக்கப்படுகிறது?
(a) பிறை வடிவ வால்வு
(b) பல்மோனரி வால்வு
(c) மிட்ரல் வால்வு
(d) இரத்தத் தந்துகி
6. தமிழ்நாட்டில் உள்ள முதுமலை வன விலங்கு சரணாலயத்தில்
குவன் அல்பைன்ஸ் என்று பெயர் கொண்ட விலங்கு எது?
(a) முள்ளம் பன்றி (b) செந்நாய் (c) கடற்பசு (d) சிங்கம்
7. பொருத்துக
(1) சிறுநீரகம் - அதிகமான நீர் மற்றும் உப்புக்கள்
(2) நுரையீரல் - யூரியா, யூரிக் அமிலம்
(3) தோல் - CO2, நீர் ஆவியாதல்
(a) 1 2 3
(b) 2 1 3
(c) 1 3 2
(d) 2 3 1
8. இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச்
செல்பவை எவை?
(a) தமனி (b) சிரை (c) தந்துகி (d) வெண்பூல்
9. தெளிவான உட்கருவைக் கொண்ட அமீபாய்டு செல் எது?
(a) எரித்ரோசைட்டு
(b) லூக்கோசைட்டு
(c) த்ராம்போசைட்டு
(d) இவற்றுள் எதுவுமில்லை
10. இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கேற்பது எது?
(a) எரித்ரோசைட்டு
(b) லூக்கோசைட்டு
(c) த்ராம்போசைட்டு
(d) இவற்றுள் எதுவுமில்லை
விடைகள்
1.C
2.B
3.A
4.D
5.C
6.B
7.D
8.A
9.B
10.C
No comments:
Post a Comment