LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 19

பொது அறிவியல் வினா விடைகள் 19

1. மக்கள் வாழும் வீடுகளிலும் மற்றும் நிறுவனங்களிலும் ஆற்றல்
சேமிப்பைக் கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நிகழ்வு --------------
ஆகும்?
(a) ஆற்றல் மேலாண்மை
(b) ஆற்றல் செவீடு
(c) ஆற்றல் முதலீடு
(d) இவற்றில் எதுவுமில்லை

2. இயற்கை வாயுவில் காணப்படும் முதன்மையான பொருள் எது?
(a) ஈதேன்
(b) மீத்தேன்
(c) புரோபேன்
(d) பியூடேன்

3. எது திரும்பப் பெற இயலாத வளம் ஆகும்?
(a) கரி
(b) பெட்ரோலியம்
(c) இயற்கை வாயு
(d) அனைத்தும்

4. சூரியனில் இருந்து பூமியின் மீது படும் தொடர்ச்சியற்ற
வெப்பத்தின் காரணமாக உருவாகும் ஆற்றல் எது?
(a) வெப்ப ஆற்றல்
(b) மின் ஆற்றல்
(c) காற்று ஆற்றல்
(d) புவி ஆற்றல்

5. மனிதர்கள் தற்போது பயன்படுத்தும் ஆற்றலை விட வருடத்திற்கு
10 ஆயிரம் மடங்கு ஆற்றலைத் தருவது எது?
(a) சூரியன்
(b) பெட்ரோல்
(c) மீதேன்
(d) மின்கலம்

6. காற்றுகளின் நாடு என அழைக்கப்படுவது எது?
(a) சுவிட்சர்லாந்து
(b) பின்லாந்து
(c) டென்மார்க்
(d) ஆப்பிரிக்கா

7. தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளிலிருந்து ---
---------- பெறப்படுகிறது?
(a) உயிரி - டீசல்
(b) உயிரி வாயு
(c) பயோ - ஆல்கஹால்
(d) பயோ - ஈதர்

8. கரிமப் பொருட்கள் காற்றில்லா சிதைவு மூலம் காற்றில்லா
சுவாசிகளான பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது எது?
(a) பசுமை டீசல்
(b) பயோ டீசல்
(c) உயிரி வாயு
(d) பயோ - ஈத்தர்

9. 90 % க்கும் அதிகமான மீத்தேனும் சிறிதளவு ஈத்தேனும் மற்றும்
புரோப்பேனும் கொண்ட கூட்டுப் பொருள் எது?
(a) நிலக்கரி
(b) டீசல்
(c) பெட்ரோல்
(d) இயற்கை வாயு

10. சீதபேதி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை எதன் மூலம் பரவுகிறது?
(a) நீர்
(b) காற்று
(c) மண்
(d) தொடர்பு

விடைகள்
1.A
2.B
3.B
4.C
5.A
6.C
7.A
8.C
9.D
10.A

No comments:

Post a Comment