LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 20

பொது அறிவியல் வினா விடைகள் 20

1. உணவு உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறும் நிகழ்ச்சி --------
(a) உணவு செரித்தல்
(b) உணவூட்டம்
(c) கழிவு நீக்கம்
(d) இவை அனைத்தும்

2. உடலின் ஒரு உறுப்பிலிருந்து பிற உறுப்புகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் கடத்தும் நிகழ்ச்சி -------------------------
ஆகும்.
(a) கடத்துதல்
(b) உணவூட்டம்
(c) கழிவு நீக்கம்
(d) சுவாசம்

3. செல்கள் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருட்களை எளிய மூலக் கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி -------- எனப்படும்?
(a) உணவூட்டம்
(b) கடத்துதல்
(c) கழிவு நீக்கம்
(d) சுவாசம்

5. பேகோசைட்டோசிஸ் என்பது என்ன?
(a) செல்சுவாசம்
(b) உணவூட்டம்
(c) செல் விழுங்குதல்
(d) பிற ஊட்டமுறை

6. எந்த ஒரு செல் உயிரிகள் அவற்றின் உணவுப் பொருளின்
டயாட்டம்களைத் தனது பொய்க்கால்கள் மூலம் விழுங்குகின்றன.
(a) பாரமீசியம்
(b) அமீபா
(c) கிளாமிடோமானஸ்
(d) ஆல்கா

7. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம்
பெறும் போது எத்தனை ATP மூலக்கூறுகள் கிடைக்கின்றன?
(a) 36 ATP
(b) 30 ATP
(c) 26 ATP
(d) 38 ATP

8. யூரிகோடெலிக் விலங்கு என்று எதனை அழைக்கிறார்கள்?
(a) மீன்
(b) தட்டைப்புழு
(c) பறவை
(d) சீலண்டிரேட்டா

9. உயிர் கிரியா ஊக்கி எனப்படுவது எது?
(a) ஹார்மோன் துகள்
(b) நொதி
(c) செரிமான மண்டலம்
(d) இவற்றுள் எதுவுமில்லை

10. மீன்களின் சுவாசப் பரப்பு எது?
(a) செவுள் பகுதி
(b) துடுப்பு
(c) வால்
(d) கண் விலங்குலகம்

விடைகள்
1.B
2.A
3. A
4.A
5.C
6.B
7.D
8.C
9.B
10.A

No comments:

Post a Comment