பொது அறிவியல் வினா விடைகள் 21
1. விலங்குகளை அவற்றின் ஒத்த தன்மை மற்றும் வேறுபாடு
ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முதலில் வகைப்படுத்தியவர் யார்?
(a) லின்னேயஸ்
(b) டார்வின்
(c) அரிஸ்டாடில்
(d) மெண்டல்
2. உலகிலேயே மிக அதிக நச்சுத் திறன் கொண்ட விலங்கு எது?
(a) ஆஸ்திரேலியா கடற் குளவி
(b) கருநாகம்
(c) ராஜநாகம்
(d) கட்டுவீரியன்
3. உண்மையான உடற்குழி கொண்ட விலங்கு எது?
(a) நாடாப் புழு
(b) மண்புழு
(c) உருளைப் புழு
(d) இவற்றுள் எதுவுமில்லை
4. பூச்சிக் கொல்லி விலங்கு வகைகளிலேயே மிகவும் சிறப்பான
வகையைச் சார்ந்தது எது?
(a) கணுக்காலி
(b) மெல்லுடலி
(c) முட்தோலிகள்
(d) சுறா
5. போலி உடற்குழியுடைவைக்கு எ.கா. எது?
(a) நாடாப் புழு
(b) மண் புழு
(c) உருளைப் புழு
(d) இவற்றுள் எதுவுமில்லை
6. வளை தசைப் புழுக்களுக்கு எ.கா. எது?
(a) அஸ்காரீஸ்
(b) மண்புழு
(c) நாடாப் புழு
(d) ஹைடிரா
7. யானைக்கால் நோயை உண்டாக்கும் பைலேரியல் புழுக்கள் எந்தத்
தொகுதிகளைச் சார்ந்தது?
(a) தட்டைப் புழுக்கள்
(b) உருளைப் புழுக்கள்
(c) கணுக்காலிகள்
(d) மெல்லுடலிகள்
8. மீன்கள் உலகிலேயே அதிக நச்சுத் தன்மையுடையது எது?
(a) திருக்கை
(b) சுறா
(c) கடல்கெண்டை
(d) கல்மீன்கள்
9. சுற்றுப் புறத்தில் ஏற்படும் முதல் அறிகுறிகளை காட்டும் தன்மை
உடையது எது?
(a) இருவாழ்விகள்
(b) நத்தை
(c) மீன்
(d) இவற்றுள் எதுவுமில்லை
10. உலகளாவிய பல்வகைத் தன்மையில் இந்தியா எத்தனையாவது
இடத்தைப் பெற்றுள்ளது?
(a) 5
(b) 7
(c) 8
(d) 10
விடைகள்
1.C
2.A
3.B
4.A
5.C
6.B
7.B
8.D
9.A
10.D
No comments:
Post a Comment