LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 21

பொது தமிழ் வினா விடை 21

1. “கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு :
நானோர் தும்பி!”
- என்று தமிழின் மீது காதல் கொண்டு பாடிய கவிஞர்
(A) பாரதியார்
(B) சுப்பரத்தினம்
(C) வெ.இராமலிங்கம் பிள்ளை
(D) சுரதா
Ans: - (B) சுப்பரத்தினம்

2. எள்ளாறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்…..
- இவ்வரிகள் இடம் பெறும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) கம்பராமாயணம்
(D) வில்லிபாரதம்
Ans: - (A) சிலப்பதிகாரம்

3. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்
- இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
(A) அழகின் சிரிப்பு
(B) தமிழ் வளர்ச்சி
(C) இளைஞர் இலக்கியம்
(D) இருண்ட வீட
Ans: - (B) தமிழ் வளர்ச்சி

4. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே
- இவ்வடிகள் இடம் பெறும் நூல்
(A) பெரிய புராணம் (B) சிலப்பதிகாரம்
(C) கம்பராமாயணம் (D) தேவாரம்
Ans: - (C) கம்பராமாயணம்

5. “ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப”
எனக் கூறும் நூல்
(A) அகநானூறு
(B) குறுந்தொகை 
 (C) கலித்தொகை
(D) புறநானூறு
Ans: - (D) புறநானூறு

6. ‘பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும்’ என்று சொன்னவர்
(A) காந்தி அடிகள்
(B) திரு.வி.கலியாண சுந்தரனார்
(C) இராமலிங்க அடிகள்
(D) தனிநாயக அடிகள்
Ans: - (A) காந்தி அடிகள்

7. ‘கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன்’ எனத் தமிழ்மொழியைப் போற்றும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) புறநானூறு
(C) பரிபாடல்
(D) திருவாசகம்
Ans: - (D) திருவாசகம்

8. பொருத்துக :
(a) விசும்பு 1. தந்தம்
(b) துலை 2. நெருப்பு
(c) மருப்பு 3. துலாக்கோல்
(d) கனல் 4. வானம்
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 2 1 3 4
(C) 1 3 4 2
(D) 4 3 2 1
Ans: - (A) 4 3 1 2

9. ‘மன்னனுக்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு’
- இப்பாடலடிகளை இயற்றிய புலவர்
(A) திருவள்ளுவர்
(B) ஒளவையார்
(C) பட்டினத்தார்
(D) காளமேகப்புலவர்
Ans: - (B) ஒளவையார்

10. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
(A) 1830
(B) 1840
(C) 1850
(D) 1820
Ans: - (A) 1830

No comments:

Post a Comment