பொது தமிழ் வினா விடை 23
1. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின பெயர்கள் இடம் பெறும் நூல்(A) பரிபாடல்
(B) கலிப்பாடல்
(C) முல்லைப் பாட்டு
(D) குறிஞ்சிப் பாட்டு
Ans: - (D) குறிஞ்சிப் பாட்டு
2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிப்பட்ட சித்தர் யார்?
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) கடுவெளிச்சித்தர்
(C) குதம்பபைச் சித்தர்
(D) அழுகுணிச் சித்தர்
Ans: - (B) கடுவெளிச்சித்தர்
3. குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்
(A) மு.வரதராசனார்
(B) அகிலன்
(C) விந்தன்
(D) புதுமைப்பித்தன்
Ans: - (A) மு.வரதராசனார்
4. ‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர்
(A) திருமூலர்
(B) திருவள்ளுவர்
(C) பாரதியார்
(D) ஒளவையார்
Ans: - (D) ஒளவையார்
5. தமிழக மக்களால் ‘காந்தியக் கவிஞர்’ எனப் பெருமையுடன் அழைக்கப் பெற்றவர்
(A) வெ.இராமலிங்கனார்
(B) பாரதியார்
(C) தி.வி.கலியாண சுந்தரனார்
(D) மீனாட்சி சுந்தரனார்
Ans: - (A) வெ.இராமலிங்கனார்
6. ‘மலரும் மலையும்’ என்ற நூலை இயற்றியவர்
(A) திரு.வி.கல்யாண சுந்தரம்
(B) மு.வரதராசன்
(C) கவிமணி தேசிய விநாயகம்
(D) வெ.இராமலிங்கம்
Ans: - (C) கவிமணி தேசிய விநாயகம்
7. இந்திய நாட்டை ‘மொழிகளின் காட்சிச்சாலை’ (ஆரளநரஅ ழக டுயபெரயபநள) எனக் குறிப்பிட்டுள்ள தமிழ் அறிஞர் யார்?
(A) ஈராசு பாதிரியார்
(B) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
(C) நேரு
(D) ச.அகத்தியலிங்கம்
Ans: - (D) ச.அகத்தியலிங்கம்
8. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி” எனக் கூறியவர்
(A) திரு.வி.கலியாணசுந்தரனார்
(B) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
(C) உ.வே. சாமிநாத ஐயர்
(D) தேவநேயப் பாவாணர்
Ans: - (D) தேவநேயப் பாவாணர்
9. “நுணங்கிநூல் நோக்கி இழையா’ இத்தொடரில் ‘நுணங்கி’ என்பதன் பொருள்
(A) ஆராய்ந்து
(B) நுண்ணறிவு
(C) வணங்கி
(C) பணிந்து
Ans: - (B) நுண்ணறிவு
10. ‘புத்தரது ஆதி வேதம்’ என்னும் நூலை எழுதியவர்
(A) அம்பேத்கர்
(B) பெரியார்
(C) அயோத்திதாசப் பண்டிதர்
(D) ஆறு.ஆழகப்பன்
Ans: - (C) அயோத்திதாசப் பண்டிதர்
No comments:
Post a Comment