LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 24

பொது தமிழ் வினா விடை 24

1. ‘புரட்சி முழக்கம்’ என்ற நூலை இயற்றியவர்
(A) பாரதிதாசன்
(B) பெரியார்
(C) சாலை இளந்திரையன்
(D) வண்ணதாசன்
Ans: - (C) சாலை இளந்திரையன்
2. பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் I பட்டியல் II
சிறப்பு அடைமொழிப்பெயர் பெயர்
(a) தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் 1. புதுமைப்பித்தன்
(b) தமிழ்நாட்டின் மாபசான் 2. அனுத்தமா
(c) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் 3. பாரதிதாசன்
(d) தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் 4. கல்கி
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 3 1 4 2
(C) 2 1 3 4
(D) 4 1 3 2
Ans: - (B) 3 1 4 2
3. பின்வருவனவற்றைப் பொருத்தி, கீழேயுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
நூல் ஆசிரியர்
தமிழ்ச் சுடர்மணிகள் 1. மறைமலையடிகள்
தமிழர் மதம் 2. திரு.வி.கல்யாணசுந்தரனார்
சைவத்திறவு 3. ரா.பி. சேதுப்பிள்ளை 
செந்தமிழும் கொடுந்தமிழும் 4. எஸ். வையாபுரிப்பிள்ளை
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 3 4 1 2
(C) 2 3 4 1
(D) 2 4 1 3
Ans: - (A) 4 1 2 3
4. பொருத்துக :
தமிழறிஞர் சிறப்பு அடைமொழி
(a) பெருஞ்சித்திரனார் 1. தமிழ்த்தாத்தா
(b) உ.வே.சா 2. சொல்லின் செல்வர்
(c) ரா.பி. சேதுப்பிள்ளை 3. தமிழ்த் தென்றல்
(d) திரு.வி.க 4. தனித்தமிழ் இயக்க மறவர்
(a) (b) (c) (d)
(A) 3 2 4 1
(B) 2 4 1 3
(C) 4 1 2 3
(D) 2 3 4 1
Ans: - (C) 4 1 2 3
5. ‘கவிஞர் முடியரசன்’ எழுதாத நூல்
(A) காவியப்பாவை
(B) தேன்மழை
(C) வீரகாவியம்
(D) பூங்கொடி
Ans: - (B) தேன்மழை
6. இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது?
(A) சரசுவதி மகால்
(B) கன்னிமாரா நூலகம்
(C) கொல்கத்தா தேசிய நூலகம்
(D) தேவநேயப் பாவாணர் நூலகம்
Ans: - (C) கொல்கத்தா தேசிய நூலகம்
7. “வசனநடை கைவந்த வல்லாளர்” – எனப் பாராட்டப்பட்டவர்
(A) ஆறுமுக நாவலர்
(B) மறைமலையடிகள்
(C) பரிதிமாற்கலைஞர்
(D) இரா.பி.சேதுப்பிள்ளை 
Ans: - (A) ஆறுமுக நாவலர்
8. ‘ஈசான தேசிகர்’ என்று அழைக்கப்படுபவர்
(A) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
(B) ஞானதேசிகர்
(C) சுவாமிநாத தேசிகர்
(D) மறைமலை அடிகள்
Ans: - (C) சுவாமிநாத தேசிகர்
9. ‘களிற்று மருப்பு’ - இலக்கணக்குறிப்பு கூறுக.
(A) வினைத்தொகை
(B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
() இருபெயரொட்டுப் பண்புத் தொகை
(D) ஆறாம் வேற்றுமைத் தொகை
Ans: - (D) ஆறாம் வேற்றுமைத் தொகை
10. ‘குயில்கள் கூவியது’ என்பது
(A) பால் வழு
(B) திணை வழு
(C) எண் வழு
(D) இட வழு
Ans: - (C) எண் வழு

No comments:

Post a Comment