LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 25

பொது தமிழ் வினா விடை 25

1. ‘பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்’ என்பது
(A) உணர்ச்சி வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) செய்தி வாக்கியம்
(D) தன்வினை வாக்கியம்
Ans: - (C) செய்தி வாக்கியம்
2. பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவி எது?
(A) கலகலவெனச் சிரித்தாள்
(B) வருக வருக என வரவேற்றான்
(C) பார்த்துப் பார்த்துப் பேசினான்
(D) நொந்தேன் நொந்தேன்
Ans: - (A) கலகலவெனச் சிரித்தாள்
3. ‘கை’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(A) காத்தல்
(B) ஒலிக்குறிப்பு
(C) ஒழுக்கம்
(D) சோர்தல்
Ans: - (C) ஒழுக்கம
4. ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’ என்னும் திருக்குறளில் பயின்று வரும் அணி
(A) எடுத்துக்காட்டுவமை அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) இலபொருள் உவமையணி
(D) வேற்றுப்பொருள் வைப்பணி
Ans: - (A) எடுத்துக்காட்டுவமை அணி
5. ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக’ என்னும் குறட்பாவில் அமைந்துள்ள மோனை
(A) ஒரூஉ மோனை
(B) பொழிப்பு மோனை
(C) கூழை மோனை
(D) முற்று மோனை
Ans: - (D) முற்று மோனை

6. ‘சீதையைக் கண்டேன்’ என்னும் தொடர்
(A) விளித் தொடர்
(B) பெயரெச்சம் தொடர்
(C) வினைமுற்றுத் தொடர்
(D) உரிச்சொற்றொடர்
Ans: - (C) வினைமுற்றுத் தொடர்
7. இடைச்சொல் கண்டறிக.
(A) தவ
(B) நடந்தான்
(C) தாமரை
(D) மற்று
Ans: - (D) மற்று

8. வளர் பிறை என்பது ---------- ஆகும்.
(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) வேற்றுமைத் தொகை
(D) உவமைத் தொகை
Ans: - (B) வினைத் தொகை
9. பிழையில்லாமல் இலக்கணத்தைக் கல்
- தன்வினை வாக்கியத்திற்குச் சரியான பிறவினை வாக்கியத்தைத் தேர்க :
(A) பிழையில்லாமல் இலக்கத்தை எழுது
(B) பிழையில்லாமல் இலக்கத்தை கற்பி
(C) பிழையில்லாமல் இலக்கத்தை படி
(D) பிழையில்லாமல் இலக்கத்தை பேசு
Ans: - (B) பிழையில்லாமல் இலக்கத்தை கற்பி
10. செல்வச் செவிலி என்பதன் இலக்கக்குறிப்பு
(A) உவமைத்தொடர்
(B) பண்புத்தொகை
(C) உருவகம்
(D) நான்காம் வேற்றுமைத் தொகை
Ans: - (C) உருவகம்

No comments:

Post a Comment