LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 32

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 32

1. (1) கதிர்கள் இணையாக அமைந்தால் இணைக்கற்றை எனப்படும்.
(2) ஒரு புள்ளியில் ஒளிக்கதிர்கள் குவிந்தால் விரிகற்றை
எனப்படும்.
(a) 1 சரி 2 தவறு 
(b) 1 தவறு 2 சரி
(c) இரண்டும் சரி 
(d) இரண்டும் தவறு
 
2. எதிரொளிப்புத் தளத்தில் படு புள்ளியின் மீது வரையப்படும்
செங்குத்துக்கோடு ---------- எனப்படும்?
(a) எதிரொளிப்புக்கோடு 
(b) குத்துக்கோடு
(c) படுகோணம் 
(d) நேர்கோடு
 
3. வைரங்கள் மினுமினுக்க முக்கிய காரணம் என்ன?
(a) பிரதி பலிப்புக் கோணம் 
(b) முழு அக எதிரொளிப்பு
(c) ஒளி விலகல் 
(d) ஒலி நேர் கோட்டில் செல்வதால்
 
4. தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு என்ன?
(a) 25 செ.மீ 
(b) 15 செ.மீ 
(c) 20 செ.மீ 
(d) 10 செ.மீ
 
5. ஆண்களின் குரல் நாண்களின் நீளம் எவ்வளவு?
(a) 10 மி. மீ 
(b) 20 மி. மீ 
(c) 15 மி. மீ 
(d) 5 மி. மீ
 
6. ஒலி வேகமாக எவற்றில் பரவும்?
(a) திரவம் 
(b) காற்று 
(c) திடப்பொருள் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
7. (1) ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை இல்லை
(2) ஒலி வெற்றிடத்திலும் பரவும்.
(a) 1 சரி 2 தவறு 
(b) 1 தவறு 2 சரி
(c) இரண்டும் சரி 
(d) இரண்டும் தவறு
 
8.மருத்துவ துறையில் நமது உடலின் உள்பகுதியை படம் பிடிக்கும்
கருவியில் பயன்படுவது எது?
(a) மீயொலி 
(b) குற்றொலி
(c) டாப்ளர் விளைவு 
(d) ஒளி இழைக் குழாய்
 
9. பொருத்துக
(a) ஒழுங்கற்ற எதிரொளிப்பு - செவ்வகப் பட்டகம்
(b) பலமுறை எதிரொளிப்பு - ஒளி இழை
(c) ஒளி விலகல் - பெரிஸ்கோப்
(d) முழு அக எதிரொளிப்பு - மரம்
(a) 4 3 1 2 
(b) 4 3 2 1 
(c) 4 2 3 1 
(d) 4 1 3 2
 
10. படு கோணம் 40டிகிரி எனில் அதன் எதிரொளிப்புக் கோணம்
எவ்வளவு?
(a) 0
டிகிரி 
(b) 40டிகிரி 
(c) 20டிகிரி 
(d) 10டிகிரி

விடைகள்
1.A 
2.B 
3.B 
4.A 
5.B
6.C 
7.D 
8.D 
9.A 
10.B

No comments:

Post a Comment