LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 35

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 35

1. பொருள்களின் மீது விசை செயல்படாத வரை அவை மாறாத
வேகத்தில் இயங்குவதாகக் கூறியவர் யார்?
(a) கலிலியோ 
(b) ஓம்
(c) பெக்கோரல் 
(d) இவர்களுள் யாருமில்லை
 
2. விசையின் அலகு என்ன?
(a) Kgs-1 
(b) Kg m s-2 
(c) Kg m-2 
(d) Kgs-2
 
3. ஒரு பொருளின் நிறை மற்றும் அதன் திசைவேகம் ஆகியவற்றின்
பெருக்கற்பலன் ----------- எனப்படும்?
(a) முடுக்கம் 
(b) திசைவேகம் 
(c) உந்தம் 
(d) விசை
 
4. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது 1 மீவி-2
முடுக்கத்தை ஏற்படுத்தும் விசை ---------- ஆகும்.
(a) 1 நியூட்டன் 
(b) பாஸ்கல் 
(c) 2 நியூட்டன் 
(d) திசைவேகம்
 
5. உந்த மாறாக் கோட்பாட்டின்படி சமமற்ற புற விசைகள் செயல்படாத
வரை ஒரு அமைப்பின் மொத்த உந்தம் --------
(a) ஒன்று 
(b) இரண்டு 
(c) மூன்று 
(d) மாறிலி
 
6. ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை விசை
உண்டு. இது நியூட்டனின் எத்தனையாவது விதி?
(a) முதல் விதி 
(b) இரண்டாம் விதி
(c) மூன்றாம் விதி 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
7. அண்டத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொன்றை ஈர்க்கிறது.
இந்த ஈர்ப்பு விசையை ஈர்ப்பியல் விசை என அழைத்தவர் யார்?
(a) நியூட்டன் 
(b) வாட் 
(c) ஓம் 
(d) கலிலியோ
 
8. டியாங்காய் - 1 என்ற விண்வெளி நிலையத்தை 2011 ஆம்
ஆண்டில் ஏவ இருக்கும் நாடு எது?
(a) ரஷ்யா 
(b) ஜப்பான் 
(c) சீனா 
(d) இந்தியா
 
9. உயிரி தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் தடுப்பு ஊசி
மருந்துகளுக்கு --------------- குளிரூட்டும் முறை அவசியமானதாகும்.
(a) ஹைட்ரஜன் 
(b) நைட்ரஜன் 
(c) ஆக்ஸிஜன் 
(d) வாயு
 
10. ராணுவம் பயன்படுத்திய கடைசி விண்வெளி நிலையம் எது?
(a) சல்யூர் 6 
(b) சல்யூட் 7 
(c) சல்யூட் 8 
(d) சல்யூட் 5 
விடைகள்
1.A 
2.B 
3.C 
4.A 
5.D
6.C 
7.A 
8.C 
9.B 
10.D

No comments:

Post a Comment