பொது தமிழ் வினா விடை 37
1. தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து ஆண்டவர்கள்(A) பாண்டியர்கள்
(B) நாயக்கர்கள்
(C) சேரர்கள்
(D) சோழர்கள்
Ans: - (B) நாயக்கர்கள்
2. ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்’
- என ஓவியருக்கு இலக்கண உரை வகுத்தவர்
(A) தொல்காப்பியர்
(B) அடியார்க்கு நல்லார்
(C) நச்சினார்க்கினியர்
(D) அகத்தியர்
Ans: - (C) நச்சினார்க்கினியர்
3. சரியான விடையைத் தேர்ந்தெடு
கீழ் உள்ளவற்றுள் தமிழ் நாட்டில் பறவைகள் புகலிடங்களுள் ஒன்று
(A) திருநின்றவூர்
(B) கரூர்
(C) வடுவூர்
(D) பேரூர்
Ans: - (C) வடுவூர்
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பட்டப்பெயர்
(A) புரட்சிக் கவிஞர்
(B) உவமைக் கவிஞர்
(C) மக்கள் கவிஞர்
(D) இயற்கைக் கவிஞர்
Ans: - (C) மக்கள் கவிஞர்
5. தேம்பாவணியில் ‘வளன்’ என்னும் பெயர்ச்சொல்லால் குறிக்கபடுபவர்
(A) இயேசு கிறிஸ்து
(B) சூசை மாமுனிவர்
(C) தாவீது
(D) கோலியாத்து
Ans: - (B) சூசை மாமுனிவர்
6. “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்
(A) நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
(B) இராமலிங்க அடிகளார்
(C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(D) பேரறிஞர் அண்ணா
Ans: - (C) திரு.வி.கல்யாண சுந்தரனார்
7. பேராயக் (காங்கிரஸ்) கட்சியிலிருந்து விலகிய பின், தந்தை பெரியார் தம்மை இணைத்துக் கொண்ட இயக்கம்
(A) நீதிக்கட்சி
(B) சுயராச்சியக் கட்சி
(C) திராவிடர் கழகம்
(D) பொதுவுடைமைக் கட்சி
Ans: - (A) நீதிக்கட்சி
8. கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் யாருடைய ஞானாசிரியர்?
(A) பெ. சுந்தரம் பிள்ளை
(B) தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(D) ரா.பி. சேதுப்பிள்ளை
Ans: - (A) பெ. சுந்தரம் பிள்ளை
9. புத்தபிரானின் பாதத்தில் எத்தனை சக்கர ரேகை உண்டு எனச் சாத்தனார் புகழ்கிறார்?
(A) 100
(B) 1000
(C) 500
(D) 900
Ans: - (B) 1000
10. “களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது இதுவென் கொல்”
- இங்ஙனம் கூறியவர்
(A) மதுரை மக்கள்
(B) கவுந்தி அடிகள்
(C) சீத்தலைச் சாத்தனார்
(D) கண்ணகி
Ans: - (A) மதுரை மக்கள்
No comments:
Post a Comment