பொது தமிழ் வினா விடை 39
1. கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்(A) கரிசாலை
(B) கையாந்தகரை
(C) சிங்கவல்லி
(D) தேகராசம்
ANS – (C) சிங்கவல்லி
2. அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
- இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?
(A) நிரல்நிறைப் பொருள்கோள்
(B) ஆற்றுநீர் பொருள்கோள்
(C) மொழிமாற்றுப் பொருள்கோள்
(D) விற்பூட்டுப் பொருள்கோள்
ANS – (A) நிரல்நிறைப் பொருள்கோள்
3. |கேண்மை| - இச்சொல்லின் எதிர்ச்சொல்
(A) துன்பம்
(B) பகை
(C) நட்பு
(D) வலிமை
ANS – (B) பகை
4. |பாலை நிலத்திற்குரிய பறவைகள்| எவை?
(A) கிளி, மயில்
(B) நாரை, அன்னம்
(C) புறா, பருந்து
(D) கடற்காகம்
ANS – (C) புறா, பருந்து
5. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.
(A) இணை மோனை
(B) பொழிப்பு மோனை
(C) ஒரூஉ மோனை
(D) கூழை மோனை
ANS – (B) பொழிப்பு மோனை
6. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடைநயம்
(A) அடிமுரண் தொடை
(B) அடி மோனைத் தொடை
(C) அடி இயைபுத் தொடை
(D) எதுவுமில்லை
ANS – (A) அடிமுரண் தொடை
7. |அரியவற்றுள்| - இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
(A) நிரை நேர் நேர்
(B) நிரை நிரை நேர்
(C) நிரை நேர் நிரை
(D) நேர் நேர் நிரை
ANS – (B) நிரை நிரை நேர்
8. சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
(A) ஒன்றே கால் மாத்திரை
(B) ஒன்றரை மாத்திரை
(C) ஒன்றே முக்கால் மாத்திரை
(D) ஒரு மாத்திரை
ANS – (B) ஒன்றரை மாத்திரை
9. “இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா” எனக் குறிபபிடும் நூல்
(A) தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C) அகப்பொருள்
(D) அகத்தியம்
ANS - (B)நன்னூல்
10. பொருந்தாததை எடுத்து எழுதுக.
(A) அரசன் வந்தது – திணை வழு
(B) கபிலன் பேசினாள் - பால் வழு
(C) குயில்கள் கூவியது – எண் வழு
(D) கமலா சிரித்தாய் - கால வழு
ANS – (D) கமலா சிரித்தாய் - கால வழு
No comments:
Post a Comment