LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 41

பொது தமிழ் வினா விடை 41

1. கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
(A) பெரியாழ்வார்
(B) அப்பூதியடிகள்
(C) மாணிக்கவாசகர்
(D) அப்பர்
ANS - (D) அப்பர்
2. “ரூபாயத்” என்பதன் பொருள்
(A) மூன்றடிச் செய்யுள்
(B) நான்கடிச் செய்யுள்
(C) இரண்டடிச் செய்யுள்
(D) ஐந்தடிச் செய்யுள்
ANS - (B) நான்கடிச் செய்யுள்
3. அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
(A) இங்கிலாந்து
(B) சீனா
(C) உருசிய நாடு
(D) அமெரிக்கா
ANS - (C) உருசிய நாடு
4. வைதோரைக் கூட வையாதே - இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
- இவ்வரியை பாடியவர் 
(A) குடும்பைச் சித்தர்
(B) கடுவெளிச்சித்தர்
(C) திருமூலர்
(D) கவிமணி
ANS - (B) கடுவெளிச்சித்தர்
5. 26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
(A) மடந்தை
(B) அரிவை
(C) மங்கை
(D) தெரிவை
ANS - (D) தெரிவை
6. குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்
(A) தமிழ், வடமொழி
(B) தமிழ், வடமொழி, இந்துத்தானி
(C) தமிழ், மலையாளம்
(D) தமிழ், ஆங்கிலம்
ANS – (C) தமிழ், வடமொழி, இந்துத்தானி
7. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்று கூறியவர்
(A) கம்பர்
(B) திருவள்ளுவர்
(C) இளங்கோவடிகள்
(D) வள்ளலார்
ANS - (D) வள்ளலார்
8. “இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்”
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) சீவகசிந்தாமணி
(B) சிலப்பதிகாரம்
(C) மணிமேகலை
(D) கம்பராமாயணம்
ANS - (C) மணிமேகலை
9. “ஒன்று கொலாம்” என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
(A) சேக்கிழார்
(B) திருநாவுக்கரசர்
(C)இளங்கோவடிகள்
(D) பாரதியார்
ANS - (B) திருநாவுக்கரசர்
10. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திருமந்திரம்
(D) திருக்குறள்
ANS - (C) திருமந்திரம்

No comments:

Post a Comment