பொது தமிழ் வினா விடை 42
1. |உண்பது நாழி உடுப்பவை இரண்டே| - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்(A) மதுரைக் கணக்காயனார் மகனர் நக்கீரனார்
(B) கணியன் பூங்குன்றனார்
(C) நரிவெரூஉத் தலையார்
(D) ஒளவையார்
ANS - (A) மதுரைக் கணக்காயனார் மகனர் நக்கீரனார்
2. உலகம் முழுவதையும் ஆலிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
(A) படை வரும் வரை
(B) காலம் வரும் வரை
(C) பணம் வரும் வரை
(D) பலம் வரும் வரை
ANS - (B) காலம் வரும் வரை
3. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
(A) உமறுப்புலவர்
(B) சீதக்காதி
(C) அபுல்காசிம்
(D) திருநாவுக்கரசர்
ANS - (A) உமறுப்புலவர்
4. பொருத்துக :
(a) காகம் 1. கூவும்
(b) குதிரை 2. கரையும்
(c) சிங்கம் 3. கனைக்கும்
(d) குயில் 4. முழங்கும்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 4 3 1 2
(C) 2 4 1 3
(D) 2 3 4 1
ANS - (D) 2 3 4 1
5. ‘மூலன்’ என்னும் இயற்பெயரை உடையவர்
(A) திருமூலர்
(B) அப்பர்
(C) சாத்தனார்
(D) தாயுமானவர்
ANS - (A) திருமூலர்
6. “ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்” – எனக் கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) அம்பேத்கார்
(C) பெரியார்
(C) அறிஞர் அண்ணா
ANS – (C) பெரியார்
7. இந்திய நாட்டை ‘மொழிகளின் காட்சிச் சாலை’ என்று கூறியவர்
(A) குமரிலபட்டர்
(B) கால்டுவெல்
(C) ச.அகத்தியலிங்கம்
(D) ஈராஸ் பாதிரியார்
ANS - (C) ச.அகத்தியலிங்கம்
8. ‘நவ்வி’ - இச்சொல்லின் பொருளை எழுதுக.
(A) மான்
(B) நாய்
(C) புலி
(D) பசு
ANS - (C) மான்
9. “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை” எனக் கூறியவர்
(A) காந்தியடிகள்
(B) பாரதியார்
(C) பசும்பொன் முத்துராமலிங்கர்
(D) பாரதிதாசன்
ANS - (C) பசும்பொன் முத்துராமலிங்கர்
10. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது
(A) கார்பன் டை ஆக்சைடு
(B) ஆக்சிஜன்
(C) குளோரோஃபுளுரோ கார்பன்
(D) மீத்தேன்
ANS - (C) குளோரோஃபுளுரோ கார்பன்
No comments:
Post a Comment