LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 43

பொது தமிழ் வினா விடை 43

1. ‘தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்’ – எனக் கூறியவர்
(A) டாக்டர் கிரௌல்
(B) கால்டுவெல்
(C) வீரமாமுனிவர்
(D) ஜி.யு.போப்
ANS - (B) கால்டுவெல்

2. ‘தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு’ - இக்கடிதப் பகுதி யாருடையது?
(A) திரு.வி.கலியாண சுந்தரனார்
(B) மு.வரதராசனார்
(C) பேரறிஞர் அண்ணா
(D) ஜவஹர்லால் நேரு
ANS - (B) மு.வரதராசனார்

3. “தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி.கல்யாண சுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்”.
(A) அம்பேத்கர்
(B) அண்ணா
(C) முத்துராமலிங்கர்
(D) பெரியார் 
ANS - (C) முத்துராமலிங்கர்

4. காமராசரின் அரசியல் குரு
(A) காந்தியடிகள்
(B) பேரறிஞர் அண்ணா
(C) நேரு
(D) சத்திய மூர்த்தி
ANS - (D) சத்திய மூர்த்தி

5. “பாவலரேறு பெருஞ்சித்திரனார்” எழுதாத நூல் எது?
(A) பாவியக் கொத்து
(B) பள்ளிப் பறவைகள்
(C) கொய்யாக் கனி
(D) குறிஞ்சித் திட்டு
ANS - (D) குறிஞ்சித்திட்டு

6. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
(A) அம்பேத்கர்
(B) கெல்லட்
(C) கமில்சுவலபில்
(D) முனைவர் எமினோ
ANS - (B) கெல்லட்

7. ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்” – எனக் கூறியவர்.
(A) இராணி மங்கம்மாள்
(B) அஞ்சலையம்மாள்
(C) வள்ளியம்மை
(D) வேலுநாச்சியார்
ANS - (A) இராணி மங்கம்மாள்

8. உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட. நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி?
(A) பேரறிஞர் அண்ணா
(B) அன்னை இந்திராகாந்தி
(C) மு.வரதராசனார்
(D) திரு.வி.க
ANS - (C) மு.வரதராசனார்

9. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) குண்டலகேசி
(D) வளையாபதி
ANS - (B) மணிமேகலை

10. பொருத்துக :
(a) திருவரங்கம் 1. சிதம்பரம் 
(b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம்
(c) திருமறைக்காடு 3. மீனாட்சி
(d) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 2 1 4 3
(C) 3 2 4 1
(D) 1 4 2 3
ANS - (B) 2 1 4 3

No comments:

Post a Comment