LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 44

பொது தமிழ் வினா விடை 44

1. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
(A) 1981
(B) 1982
(C) 1983
(D) 1985
ANS - (A)1981

2. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. – எனக் கவிதை பாடியவர்.
(A) சுரதா
(B) கண்ணதாசன்
(C) பாரதிதாசன்
(D) மு.மேத்தா
ANS - (B) கண்ணதாசன்

3. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்
- எனப் பாடியவர்.
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) சுரதா
(D) கண்ணதாசன்
ANS - (A) பாரதிதாசன்

4. மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
(A) கலம், தோணி, புணரி, மிதவை
(B) கலம், பரிசில், ஓடம், பரவை
(C) கலம், வங்கம், புணை, அம்பி
(D) கலம், பரிசில், ஆழி, பஃறி
ANS - (C) கலம், வங்கம், புணை, அம்பி

5. பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக :
(a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி 
(b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி
(c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 1 4 2 3
(C) 1 3 4 2
(D) 1 2 4 3
ANS - (B) 1 4 2 3

6. பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
(A) ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடை மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
(B) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
(C) ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
(D) ஒரு மாவட்த்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்.
ANS - (B) ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

7. “மாகதம்” எனப்படுவது
(A) மதுரகவி
(B) சித்திரகவி
(C) வித்தாரகவி
(D) ஆசுகவி
ANS - (C) வித்தாரகவி

8. அகத்திணையின் வகைகள்
(A) ஐந்து
(B) ஆறு
(C) மூன்று
(D) ஏழு
ANS - (D) ஏழு

9. கரணத்தேர் ---------------------- எனப்பிரியும்
(A) கரணம் + தேர்
(B) கரணத்து +ஏர்
(C) கரன் அத்து + ஏர்
(D) காரணம் + தேர்
ANS - (B) கரணத்து + ஏர்

10. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
(A) இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
(B) இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
(C) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
(D) செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை 
ANS - (C) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

No comments:

Post a Comment