பொது தமிழ் வினா விடை 45
1. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.(A) குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
(B) சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
(C) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
(D) சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
ANS - (C) குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
2. பகுபத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
(A) பகுதி, சந்தி
(B) இடைநிலை, சாரியை
(C) பகுதி, விகுதி
(D) விகுதி, சாரியை
ANS - (C) பகுதி, விகுதி
3. உறுவேனில் - இலக்கணக் குறிப்பு யாது?
(A) வினைத்தொகை
(B) உரிச்சொற்றொடர்
(C) பண்புத்தொகை
(D) வினையெச்சம்
ANS - (B) உரிச்சொற்றொடர்
4. “இறை, செப்பு” என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்
(A) வினா
(B) மொழி
(C) விடை
(D) இறைவன்
ANS - (C) விடை
5. கீழ்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
(A) யானையின் கண் சிறியது
(B) யானையின் கண்கள் சிறியது
(C) யானையின் கண்கள் சிறியன
(D) யானையின் கண் சிறியன
ANS - (C) யானையின் கண்கள் சிறியன
6. ஓடையில் யானையும் யானைக் ------------------------------ ம் நின்றன.
(A) யானைக் கன்று
(B) யானைக் குட்டி
(C) யானைக் குருளை
(D) யானைப் பிள்ளை
ANS - (A) யானைக் கன்று
7. சுநகசபைநசயவழச – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
(A) குளிர் பதனப் பெட்டி
(B) குளிரூட்டும் பெட்டி
(C) குளிர்சாதனப் பெட்டி
(D) குளிர் காக்கும் பெட்டி
ANS - (C) குளிரூட்டும் பெட்டி
8. ‘கோ’ - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக
(A) அரசன்
(B) அன்னம்
(C) ஆதவன்
(D) அன்பு
ANS - (A) அரசன்
9. உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக :
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 3 4 1
(C) 4 1 2 3
(D) 4 2 1 3
ANS - (C) 4 1 2 3
10. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்|
- இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) ஏர் எழுபது
(D) திருக்கோவை
ANS - (B) திருவாசகம்
No comments:
Post a Comment