பொது தமிழ் வினா விடை 46
1. “கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(A) எருமை
(B) புலி
(C) கரடி
(D) பன்றி
ANS - (D) பன்றி
2. பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் I பட்டியல் II
(a) திருஞானசம்பந்தர் 1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர் 3. திருவாமூர்
(C) மாணிக்கவாசகர் 4. சீர்காழி
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 2 3 1
(C) 2 4 1 3
(D) 2 3 4 1
ANS - (A) 4 3 2 1
3. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ”
- இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(A) நற்றிணை
(B) கலித்தொகை
(C) குறுந்தொகை
(D) புறநானூறு
ANS - (C) குறுந்தொகை
4. “தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
ANS - (B) மூன்று
5. பொருந்தாத இணையைக் கண்டறிக :
(A) மேதி – எருமை
(B) சந்தம் - அழகு
(C) கோதில் - பசு
(D) அங்கணர் - சிவன்
ANS - (C) கோதில் - பசு
6. பொருத்துக : பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் 1. இருள்
(b) இந்து 2. புன்னகை
(c) முறுவல் 3. கண்கள்
(d) அல் 4. நிலவு
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 3 2 1 4
ANS - (A) 3 4 2 1
7. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
(A) பன்னாடு தந்த மாறன் வழுதி
(B) இளம் பெருவழுதி
(C) உக்கிரப் பெருவழுதி
(D) பாண்டியன் மாறன் வழுதி
ANS - (A) பன்னாடு தந்த மாறன் வழுதி
8. உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை
(A) வேகம்
(B) வளம்
(C) மதில்
(D) மேகம்
ANS - (C) மதில்
9. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க “உருமு"
(A) இடுப்பு
(B) இடி
(C) மேகம்
(D) கதிரொளி
ANS - (B) இடி
10. குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?
(A) நந்திக்கலம்பகம்
(B) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
(C) கலித்தொகை
(D) நற்றிணை
ANS - (B) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
No comments:
Post a Comment