LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 47

பொது தமிழ் வினா விடை 47

1. கள்ள வேடம் புனையாதே – பல
கங்கையில் உன்கடம் நனையாதே
- இதில் ‘கடம்’ என்பதன் பொருள்
(A) உடம்பு
(B) கால்கள்
(C) கைகள்
(D) தலை
ANS - (A) உடம்பு
2. திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
(A) உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
(B) 220 தலங்கள் வழப்பட்டார்
(C) திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்.
(D) அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார். 
ANS - (D) அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்.
3. உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
(A) 120 பாக்கள்
(B) 204 பாக்கள்
(C) 80 பாக்கள்
(D) 67 பாக்கள்
ANS - (C) 80 பாக்கள
4. சாலை இளந்திரையன் தமிழக அரசின் “பாவேந்தர் விருது” பெற்ற ஆண்டு எது?
(A) 1990
(B) 1991
(C) 1993
(D) 1994
ANS - (B)1991
5. நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது.
(A) பாண்டிய மன்னன்
(B) குலசேகர ஆழ்வார்
(C) மூன்றாம் நந்திவர்மன்
(D) பல்லவ மன்னன்
ANS - (C) மூன்றாம் நந்திவர்மன்
6. எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
(A) குறுந்தொகை
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) பதிற்றுப்பத்து
ANS - (B) நற்றிணை
7. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
(A) உமறுப்புலவர்
(B) கம்பர்
(C) நாமக்கல் கவிஞர்
(D)பாரதியார்
ANS - (B) கம்பர்
8. சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
(A) மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்
(B) சிலப்பதிகாரமும், வளையாபதியும்
(C) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
(D) மணிமேகலையும், வளையாபதியும்
ANS - (C) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
9. வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
– எப்பாடல் வகையை சார்ந்தது. 
 (A) தொழிற் பாடல்
(B) விளையாட்டுப் பாடல்
(C) ஒப்பாரி பாடல்
(D) சடங்குப் பாடல்
ANS - (A) தொழிற் பாடல்
10. “யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்” – என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
(A) வாணிதாசன்
(B) கணியன்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
ANS - (C) பாரதியார்

No comments:

Post a Comment