பொது அறிவியல் வினா விடைகள் 43
01. கீழ்க்கண்டவற்றுள் எது நீர்ம கொழுப்பு, புரதம், நீர் சேர்ந்தகலவையாகும்?
(A) தேன்
(B) பால்
(C) எண்ணெய்
(D) மீன்
02. கீழ்க்கண்டவற்றுள் எது தூய பொருள் அன்று?
(A) வாலை வடிநீர்
(B) தூயக்காற்று
(C) சமையல்சோடா
(D) காற்று
03. ஒரே வகை அல்லது வெவ்வேறு வகை அணுக்களால் ஆனது எது?
(A) மூலக்கூறு
(B) அணு
(C) தனிமம்
(D) சேர்மம்
04. இது வரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை
யாது?
(A) 112
(B) 142
(C) 118
(D) 120
05. இது வரையில் அதிகாரப்பூர்வமாக IUPAC குறியீடு வெளியிடப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை யாது?
(A) 118
(B) 116
(C) 120
(D) 112
06.இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள் எத்தனை?
(A) 86
(B) 92
(C) 90
(D) 76
07. குளோரின் என்ற தனிமத்தின் நிறம் என்ன?
(A) வெள்ளை
(B) ஆரஞ்சு
(C) பசுமை கலந்த மஞ்சள்
(D) நிறமற்றது
08. ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன்,நைட்ரஜன், கால்சியம் மற்றும்
பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் எத்தனை சதவீதம் மனித உடலின்
நிறையில் உள்ளது?
(A) 99%
(B) 80%
(C) 60%
(D) 18%
09. புவியில் உள்ள 20 விழுக்காடு ஆக்ஸிஜன் எங்கு உருவாகிறது?
(A) அமேசான் காடு
(B) ஆர்ட்டிக் பகுதி
(C) அந்தமான் தீவு
(D) இவற்றுள் எதுவுமில்லை
10. அண்டம் மற்றும் விண்வெளியில் உள்ள மிக முக்கியமான
தனிமங்கள் யாவை?
(A) ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்
(B) ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
(C) நைட்ரஜன் மற்றும் ஹீலியம்
(D) ஹீலியம் மற்றும் ஆக்ஸிஜன்
விடைகள்
01.B
02.D
03.A
04.C
05.D
06.B
07.C
08.A
09.A
10.B
No comments:
Post a Comment